குழந்தை இலக்கியம்: 'சிறகை விரி'
சிறகை விரி
கதிரின் அடிநுனிவரை
பறக்க சிறகை விரி

சுயநல கூண்டுக்குள்
முடங்கிவிடாதே!
சிறகை விரி

உன் சத்திய அறிவு
வர்ண ஜாலத்தில்
முங்கி உயிர் பெற
உலகம் காத்திருக்கிறது …
சிறகை விரி

ஆயிரமாயிரம்
அறியாமை
இருட்திரைக்குள்
உறங்கிக் கிடக்கும்
மனித இனத்தை …
கதிராய் துளைத்தெடுத்து
அறிவொளி பக்கம் துயிலெழுப்ப..
சிறகை விரி

ஒளியின் பேரொளியாய்
உலகில் படர்ந்திருக்கும்
அருளவனின் அருட்திரைக்குள்
பேரானந்த பரவசம் பெற
சிறகை விரி!

- சின்னக்குயில்


(அன்பு பேரன் ஹாமீமுக்காக)

Related

குழந்தை இலக்கியம் 771854246011718410

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress