அரபி எழுத்துக்கள்
http://mazalaipiriyan.blogspot.com/2012/11/blog-post_26.html
'அரபு' மொழி 'அராமிக்' அல்லது 'அரேமியம்' என்னும் மொழியிலிருந்து மேம்பட்ட மொழியாகும். இதை மொழியியல் வல்லுனர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
அரேமியம் இஸ்லாத்தின் வருகைக்கு முன் சுமார் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பேச்சுவழக்கில் இருந்த மொழியாகும்.
அரபு மொழியின் மொத்த எழுத்துக்கள் 28.
ஒவ்வொரு எழுத்தும் நான்குவிதமான உச்சரிப்பு கொண்டது. முன்-பின் சொற்களைப் பொறுத்து அந்த உச்சரிப்பு மாறும்.
அரபி எழுத்துக்கள் தமிழ் மொழியைப் போல இடதுபுறத்திலிருந்து வலதுபுறமாக எழுதப்படுவதில்லை. சீன,ஜப்பானிய இன்னும் சில மொழிகளைப் போல மேலிருந்து கீழாக எழுதப்படுவதில்லை. அரபி எழுத்துக்கள் வலதுபுறத்திலிருந்து இடதுபுறமாக எழுதப்படுகின்றன.
அரபி எழுத்துக்களின் எழுத்து வடிவம் வளைவு, நெளிவு மற்றும் அரைவட்டங்கள் கொண்டது. இந்த எழுத்து நடையால் எழுத்துருக்கள் உருவாவதில் சமீபகாலம்வரை சிக்கலாக இருந்தது.
அதனால், கையெழுத்து வடிவமாகவே அதன் எழுத்துருக்கள் நீண்ட காலமாக இருந்தன. இதன் விளைவாக 'காலிகிராபி' என்னும அற்புதமான அழகிய 'எழுத்தோவியக் கலை' உருவாக காரணமானது.