அறிவமுது: 'தேசிய கொடி உருவானது இப்படிதான்!'



20 ஆம், நூற்றாண்டின் துவக்கமது.
ஆங்கிலேயனிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக இந்தியரின் போராட்ட வீரியத்தை அதிகப்படுத்தவும், உணர்வுகளை ஒருமுகப்படுத்தவும் ஒரு கொடி தேவைப்பட்டது.
1904 - ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா முதன்முதலாக, ஒரு கொடியை வடிவமைத்தார். அது நிவேதிதாவின் கொடி என அவர் பெயராலேயே வழங்கப்பட்டது.
1906 - ஆம் ஆண்டு கோல்கத்தாவின் பார்சி பாகன் சதுக்கத்தில் சிவப்பு, பச்சை, மஞ்சள் என்று கிடைமட்டமாக அமைந்த ஒரு கொடி ஏற்றப்பட்டது. இது பச்சை நிறம் மேல் பகுதியிலும், இளஞ்சிவப்பு நடுவிலும், சிவப்பு நிறம் அடிப்பகுதியிலும் கொண்டது.
பச்சை நிறம் இஸ்லாத்தையும், இளஞ்சிவப்பு நிறம் இந்து மற்றும் பௌத்த மதங்களையும் குறிப்பதாகவும் அமைந்தன. வந்தேமாதரம் என்ற வார்த்தைகள், கதிர்வீசும் ஆதவன், பிறைசந்திரன், நட்சத்திரங்கள் என்று அந்தக்கொடி ஆங்கிலேயரின் கீழ் இருந்த எட்டு மாகாணங்களை குறிக்கும் வகையில், வரிசையாக எட்டு தாமரைகளை கொண்டிருந்தது.
நடுபாகத்தில், தேவநகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. அடி பாகத்தின் கொடிக் கம்பத்திற்கு அருகில் உள்ள மூலையில், ஒரு பிறைநிலாவையும், இன்னொரு மூலையில் சூரியனையும் கொண்டிருந்தது.



பின்னர், 1907 - இல் அந்தக் கொடியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. 8 வெண்தாமரைகளுக்குப் பதிலாக, வானில் ஒளிவீசும் 7 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டன.  அந்தக் கொடி பிக்காய்ஜிரஸ் டோம்ஜிகமா அம்மையாரும், அவரது கூட்டாளிகளும் பாரிஸ் நகரில் ஏற்றி மகிழ்ந்தனர்.
1917 - ஆம் ஆண்டு மீண்டும் தேசிய கொடி மூன்றாவது முறையாக மாற்றத்துக்குள்ளானது. இதை டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும், பாலகங்காதர திலகரும் வடிவமைத்தனர். சிவப்புநிற பட்டை மற்றும் பச்சைநிற பட்டைகளுக்கு அடுத்தடுத்து அமைந்த இதன்  மேற்பகுதியில் இடது புறம் யூனியன் ஜாக்கும், வலது புறம் பிறைச்சந்திரன் கூடிய நட்சத்திரமும், நடுவில் சில நட்சத்திரங்களுமாய் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இக்கொடி மக்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பைப் பெறவில்லை.
1921 - ஆம், ஆண்டு விஜயவாடாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அப்போது பிங்கிலி வெங்கையா என்ற இளைஞர் இந்து, முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக காவி, பச்சை நிறங்களில் ஒரு கொடியை வடிவமைத்து காந்தியிடம் கொடுத்தார்.
இந்தக்கொடி அனைத்து காங்கிரஸ் கூட்டங்களிலும் பறக்கவிடப்பட்டது.
ஆயினும் பெரும்பாலானோர் இந்தக் கொடியையும் விரும்பவில்லை



1924 – ஆம், ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமஸ்கிருத குழுமம், இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கதத்தை உணர்த்தும் வகையில் காவி நிறத்தை கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தியது. பின்னர், அதே ஆண்டு, மற்ற மதத்தினரும் தத்தம் மதத்தை குறிக்க வெவ்வேறு மாற்றங்களை கொடியில் வலியுறுத்தினர்.
ஏப்ரல் 2, 1931 இல்,  காங்கிரஸ்  அமைத்த ஏழு நபர்கள் அடங்கிய ஒரு குழு, கொடியில் அமைந்துள்ள மூன்று வண்ணங்களும், மத உணர்வுகளை தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்றும், அதற்கு பதிலாக, ஒரே வண்ணமாக, அதாவது  காவி நிறமும் அதில் சக்கரமும் இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ் அதனை ஏற்கவில்லை.



பின்னர், 1931 இல், கராச்சியில் கூடிய காங்கிரஸ், பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த, காவி, வெள்ளை, பச்சை வண்ணங்களுடன்  நடுவில் சக்கரத்தை கொண்ட கொடிக்கு ஒப்புதல் அளித்தது.
காவி நிறம் தைரியத்தையும், வெள்ளை நிறம் சத்தியம் மற்றும் அமைதியையும்  பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் செழுமையையும் குறிப்பதாகும்.
அதே சமயம், ஆசாத் ஹிந்த் என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட, சக்கரத்திற்கு பதிலாக தாவும் புலியை நடுவில் கொண்ட ஒரு கொடியை இந்திய தேசிய படை பயன்படுத்தியது.
சக்கரத்திற்குப் பதிலாக அமைந்த புலியின் உருவம், மகாத்மா காந்தியின் அகிம்சை வழிகளுக்கு நேர் எதிர் மாறான சுபாஸ் சந்திரபோசின் வழிகளை உணர்த்துவதாக அமைந்தது. இரண்டாம் உலகப் போரின்போது, சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசியப் படை பயன்படுத்திய இந்தக் கொடி தேசியக் கொடியாக இல்லாவிடிலும் முதல் முதலாக மணிப்பூரில், சுபாஸ் சந்திர போஸாஸ் ஏற்றப்பட்ட கொடியாகும்.

நாட்டு விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழு, இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை அனைத்து இந்திய சமூகத்தினரும் ஏற்கும் வகையில், சில மாறுதல்களுடன் இந்திய தேசியக் கொடியாக ஒப்புக் கொண்டது. முன்னிருந்த சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்படுத்தப்பட்டது.
அடர்த்தியான காவி, அடர்த்தியான பச்சை இவைகளுக்கு மத்தியில் தூய வெண்மை ஆகிய மூவண்ணங்கள் கொடியில் அமைந்தன. மத்தியிலுள்ள வெண்மை நிறப்பட்டையில் கடல்நீல வண்ணத்தில் 24 அரும்புக் கால்களுடன் ஓர் அசோகச் சக்கரமும் கொண்டு வரையறுக்கபட்ட நீள அகலத்தில் கொடி உருவாக்கப்பட்டது.
இதை 22.07.1947 இல், இந்திய அரசியல் நிர்ணய சபைகூடிய போது தேசியக் கொடியாக அறிவிக்கப்பட்டு, அதன்பின், முதன்முதலில் டில்லி செங்கோட்டையில் அதிகாரபூர்வமாக 1947 ஆம், ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் பட்டொளி வீசிப் பறக்கவிடப்பட்டது.



இந்தியா குடியரசு நாடான  பிறகு, 1951-இல், இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறையினரால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது.  இது சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964 - இல், மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17, 1968 - இல் இந்த அளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு (அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரம் என்று மேம்படுத்தப்பட்டது.
கொடித்தயாரிப்பில் இந்த அளவுமுறைகளை மீறுவது மிகப்பெரிய குற்றமாகும். இதை மீறுபவர்கள் அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக அனுபவிக்க வேண்டியிருக்கும்.
நமது தேசியக்கொடி காதி என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே அமைந்திருக்க வேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்) இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகவும் அது இருக்கலாம்.
கொடியின் முக்கிய மூவர்ண பகுதி ‘காதி-பண்டிங்’ என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம்காதி-டக்’ என்கிற நெசவு கொண்ட இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related

அறிவமுது 362970075513263463

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress