அறிவமுது:'விண்ணைத் தாண்ட வயதா தடை?'




1876ல் அலெக்சாண்டர் கிரஹாம்பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோது அவருக்கு வயது 29


பிக்விக் பேப்பர்ஸ் என்று அகில உலக நகைச்சுவை நாவலை எழுதிப் பிரபலமடைந்த போது சார்லஸ் டிக்கன்ஸுக்கு வயது 25.


மார்ட்டின் லூதர் பெரும் மதச் சீர்திருத்தவாதியாய் மாறியபோது அவருக்கு வயது 21.


வில்லியம் பிட் 1783ல் இங்கிலாந்தின் பிரதமராகப் பதவி ஏற்றபோது அவருக்கு வயது 24.


வால்ட் டிஸ்னி தனது முதல் கார்ட்டூன் சினிமாவை 1923ல் வெளியிட்டபோது அவருக்கு வயது 22



ஆங்கில சுருக்கெழுத்தைக் கண்டுபிடித்து 1837ல் ஐசக் பிட்மன் வெளியிட்டபோது அவருக்கு வயது 24


பார்வை, செவிப்புலன் இழந்த ஹெலன் கெல்லர் என்ற பெண்மணி தனது வாழ்க்கைச் சரிதையை வெளியிட்டபோது அவருக்கு வயது 22.


முதல் விண்வெளி வீரரான யூரி ககாரின் தன் சாதனையைச் செய்தபோது அவருக்கு வயது 27.


தனது முதல் புத்தகமான இஸ்டான்புல் டிரெய்ன் மூலம் அகில உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் கிராம் க்ரீன் அந்தப் புத்தகத்தை வெளியிட்டபோது வயது 27.


பிரபல பரிணாமத் தத்துவத்தின் தந்தையான சார்லஸ் டார்வின் அந்த ஆராய்ச்சிக்காகதி பீகல் என்ற கப்பலில் கடற்பிராயணம் மேற்கொண்டபோது வயது 22.


வாஷிங்டன் இர்வின் என்ற எழுத்தாளர் தம் இருபது வயதிலேயே உலகப் புகழை அடைந்து விட்டார்


கான்ட் தனது எழுபது வயதிற்குப் பின் மிகச் சிறந்த தத்துவ நூல்களை எழுதினார். 

கிளமென்சு திறன்மிகு உழைப்பால் 75 வயதிலும் பிரான்சின் புலி ஆனார்.


ஆண்ட்ரூ மெலன் 82 வயதிலும் மிகச் சிறந்த நிதி நிறுவனராக விளங்கினார்


வான்ட்டல் பில்ட் தளராத சுறுசுறுப்புடன் 70 வயதிற்குப் பின்னும் இருப்புப் பாதை அமைப்பாளராக விளங்கினார்


வால்டர் டாம்ராஸ்க் தனது தளராத இசை ஞானத்தால் 75 வயதிலும் மிகச் சிறந்த இசைக் குழுக்களை நடத்தினார்


மோனட் என்னும் பிரான்ஸ் நாட்டுக் கலைஞர் தனது 86வது வயதில் மிகச் சிறந்த வண்ண ஓவியங்களை வரித்தார்

வான் ஹம் போல்ட் தனது உலக சாதனையைத் தனது 76ல் தொடங்கி 90வரை நிகழ்த்தினார். 


கதே தனது 80 வயதில் தலைசிறந்த இலக்கியம் படைத்தார்

விக்டர் ஹயூகோ தனது 80 வயதில் மிகச் சிறந்த நூலை எழுதினார். 

திதியன் தனதுலெப்னடோ போர் எனற நவீனத்தைத் தனது 98வது வயதில் தீட்டினார்.

Related

அறிவமுது 2706783651111171331

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress