அறிவமுது: 'மின்மினி பூச்சிகள்!'


மின்மினி பூச்சிகள் இருள் சூழ்ந்த இரவு நேரங்களில் கிராமப்புறத்து வயல்வெளி மற்றும் சமவெளிகளில் மின்னிச் செல்லும் அழகே அழகு! அவற்றைப் பிடித்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நாமும் மின்மினியாய் மாற முயலும் அந்த பள்ளிபருவத்து நாட்கள் நினைவில் எழுகின்றன.
மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். இவை Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் கொண்டவை. இவற்றின் முட்டை புழுவிலிருந்து முதிர்ந்த வண்டுகள்வரை எல்லாமே ஒளிரும் திறன் கொண்டவை.
சரி.. மின்மினிப்  பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ? அது  ஒரு வியப்புக்குரிய  உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இது bioluminescence எனப்படும்.
மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் மின்மினிப் பூச்சியின் வெளிச்சமோ  வெப்பம் தருவதில்லை!  இதன் ஒளிர்வுக்கு எரி பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருளாகும். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.  இந்தலூசிஃபெரின்’ மற்றும்லூசிஃபெரெஸ்’ என்றஎன்ஸைமில்’ (enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ‘ATP’ என்ற வேதியியல் பொருள், மற்றும்மக்னிசியம்’ ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது. இந்த வேதியல் அமைப்பில் எது இல்லாமல் போனாலும் ஒளியுண்டாகாது.
மின்மினிப் பூச்சி ஒளிர்வதற்கு, அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்களில் (nerve impulses) விட்டு விட்டு நடக்கும் இயக்கமே காரணம்.

Related

அறிவமுது 6701330495427499237

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress