அறிவமுது: 'சூரிய - சந்திர கிரகணங்கள்' என்பவை என்ன?
கிரகணம் என்பது ஒரு வானவியல் நிகழ்வு.

வானில் பல கிரகங்கள் சுழன்று வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியும் ஒன்று. பூமி  தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றது. அப்படி பூமி தன்னைத் தானே சுற்ற ஒரு நாளும் சூரியனை ஒருமுறை சுற்ற ஒரு வருடமும் ஆகின்றது

பூமி தன்னைதானே சுற்றுவதால் பூமியில் இரவு - பகல் தோன்றுகின்றன. சூரியனைச் சுற்றுவதால் பூமியில் பருவ காலங்கள் வருகின்றன.

அத்துடன் பூமியின் உப கிரகமான சந்திரனும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு பூமியையும் சுற்றுவதுடன் பூமியுடன் இணைந்து சூரியனையும் சுற்றிவருகின்றது

சந்திரன் பூமியச் சுற்றுவதனால் பூமியில் அமாவாசை, பௌர்ணமி போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. இவ்வாறு சந்திரன் பூமியைச் சுற்றி வரும் போது 29 1/2 நாட்களுக்கு ஒருமுறை பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயும், சூரியனுக்கு எதிர் திசையிலும் அது வருகின்றது

அதனால் பூமியில் இருப்போருக்கு (சந்திரனில் சூரிய ஒளி விழாது) இருட்டாக அமாவாசையாகவும் சூரிய ஒளிவெளிச்சம் பெற்று பிரகாசமாக பௌர்ணமியாகவும் சந்திரன் தோற்றமளிக்கின்றது. இதற்குக் காரணம் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வருவதே 

பௌர்ணமி தினத்தில் பிரகாசமாக தோற்மளிக்கும் சந்திரன் சில சமயங்களில் பூமியின் நிழலால் மறைக்கப்பட்டும், அமாவாசை தினத்தில் சூரியன் சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டும் விடுகின்றது. இந்நிகழ்வையே சந்திர, சூரிய கிரகணம் என்று அழைக்கின்றோம்.

சந்திரன் பூமியைச் சுற்றும் போது ஒழுங்கான வட்டப் பாதையில் சுற்றாமல் நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது. இதனால் சந்திரன் ஒரு காலப் பகுதியில் பூமிக்கு மிக அருகில் வருகிறது. வேறு காலங்களில் பூமிக்கு தொலைவாகவும் செல்கிறது.

இதேபோல் பூமியும் நீள் வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றுவதால் பூமியும் சூரியனில் இருந்து வித்தியாசமான தூரங்களில் சுற்றி வருகின்றது

அனைத்து கோள்களும் சற்றே சாய்ந்த நிலையில் அதாவது பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்தும் சூரியன் தன் அச்சில் 7 பாகை சாய்வாகவும் தத்தமது பாதைகளில் சுற்றிவருகின்றன. இதேபோல, சந்திரனும 5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது 

இந்த காலகட்டத்தில் பூமி, சூரியன் மற்றும் சந்திரன் இவை மூன்றும் எப்போதாவது, ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன அப்படி அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, ஏதாவது ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறதுஇதுதான் கிரகணம் என்று சொல்லப்படுகிறது 
சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் நிகழ்கின்றன 

எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை

அது மட்டுமல்ல சூரியனும் தனது தாய் வீடான பால்வெளி மண்டலத்தில் (Milky Way galaxy) தனது குடும்ப உறுப்பினர்களான கோள்கள், துணைக் கோள்கள், குள்ளக் கோள்கள், குயிப்பர் வளையம், ஊர்ட் மேகம், மற்றும் வால் மீன்கள் சகிதமாக நொடிக்கு சுமார் 250 - 270 கி. மீ. வேகத்தில் சுற்றி வருகிறது 

இந்த நிகழ்வு முடிய சுமார் 22.5 கோடி ஆண்டுகள் ஆகும். இதுவே ஒரு பிரபஞ்ச ஆண்டு என்றும் சொல்லப்படுகிறது. 

அத்துடன் நாம் வாழும் சூரிய குடும்பம், பால்வெளி மண்டலத்தில் ஒரு மணல் துகள் போல உள்ளதால் பால்வெளி மண்டலத்தை 22 1/2 கோடி ஆண்டுகளில் ஒரு முறைதான் சுற்ற முடிகின்றது. சந்திரன் தன் அச்சில் 5 பாகை சாய்வாக சுற்றுவதால், இவை மூன்றும் ஒரே நேர்கோடில் வரும் சாத்தியக் கூறு எல்லா அமாவாசை, பெளர்ணமி நாட்களிலும் இல்லை. 

சூரியனுடன் ஒப்பிடும்போது சந்திரன் மிகச் சிறியது அதன் விட்டம் 384,400 கி. மீ. மட்டுமே இதில் சூரியன் சந்திரனைவிட 400 மடங்கு பெரியது.  

அதேப் போல பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 400 மடங்கு அதிகம் 


சூரியன் அளவில் பெரிதாக இருந்து வெகு தொலைவில் இருப்பதாலும் சந்திரன் அளவில் சிறிதாக அதேசமயம் வெகு அருகில் இருப்பதாலும் பூமியிலிருந்து நாம் பார்க்கும்போது சூரியனும், சந்திரனும் கிட்டத்தட்ட ஒரே அளவுள்ளதாக தோன்றுகின்றன. மிகப் பெரிய சூரியனை மறைத்து முழு சூரிய கிரகணம் ஏற்படுவதும் இதனால்தான்! 

பொதுவாக ஓராண்டில் 2 - 5 சூரிய கிரகணமும், அதிகபட்சமாக 3 சந்திர கிரகணமும் ஏற்படலாம். சில சமயம், ஒரு சந்திர கிரகணமும் ஏற்படாமல் போகலாம் ஆனால், ஓராண்டில் அதிகபட்சம் 7 கிரகணங்கள் தான் நிகழ வாய்ப்பிருக்கிறது. இவற்றில் நான்கு முறை சூரிய கிரகணங்களாகவும், மூன்று முறை சந்திர கிரகணங்களாவும் இருக்கலாம் 

முழுமையான சூரிய கிரகணத்தின் மிக நீண்ட நேரம் என்பது 7.5 நிடங்கள் மட்டுமே 


எப்போதும் வட தென் துருவங்களில் ஒரு பகுதி சூரிய கிரகணம் மட்டுமே கண்களுக்குத் தெரியும். நில நடுக்கோட்டு (மத்திய தரைக்கோட்டிற்கு) அருகே கிரகணம் நிகழும் போதுதான் முழு சூரிய.. சந்திர கிரகணங்கள் உண்டாகின்றன. 

ஒரே மாதிரியான சூரிய கிரகண நிகழ்வுகள் (நேரம், வகை போன்றவை) 18 ஆண்டுகள் மற்றும் 11 நாட்களில் அதாவது 6,585.32 நாட்கள் நிகழுகின்றன. இதற்கு சாரோஸ் சுழற்சி என்று பெயர் 
பொதுவாக, கிரகணம் சூரிய உதயத்தில் தொடங்கி பூமியின் ஏதாவது ஒரு பாதியில் சூரியன் மறையும் போது முடிவடைகிறது. ஓர் ஆண்டில் பூமியில், எங்காவது இரு இடங்களில் கட்டாயம் சூரிய கிரகணம் நிகழும்.

கிரகணத்தின்போது அதன் நிழல் விழும் பகுதியின் கறுப்பு மற்றும் கருமை குறைவான பகுதிகளை முறையே, அம்பரா (Umbra), பெனும்பரா (Penumbra) என்று அழைக்கின்றனர். சூரிய ஒளியே படாத பகுதி அம்பரா. சூரிய கதிர்சிதறல் படும் பகுதி பெனும்பரா 

சூரிய உதயம் மற்றும் அஸ்தமனங்களில் சந்திர கிரகணத்தைப் பார்க்க நேரிட்டால், சூரியன், சந்திரன் இரண்டும் எதிரெதிர் திசையில் அற்புதமாய் தெரியும் 


இந்த ஆண்டு ஜூன் 15 ஆம் நாள் ஏற்பட்ட முழு சந்திர கிரகணம் ஓர் அரிதான நிகழ்வுஏனெனில் இந்த கிரகணத்தின் போது, சந்திரன் பூமியின் மைய நிழலை ஒட்டி பயணித்தது இது போலவே ஒரு முழு சந்திர கிரகணம் கி. பி. 2000 ஆண்டு, ஜுலை 16ல் உண்டானது இனி இதனை ஒத்த முழு சந்திர கிரகணம் கி. பி. 2018, ஜுலை 27 ஆம் நாள்தான் வரும்இந்த கிரகணத்தை முழுமையாக உலகின் பாதி மக்கள் பார்த்து மகிழலாம் இது ஆபிரிக்கா, மத்திய ஆசியா ஆகிய நாடுகளில் முழுமையாகத் தெரியும். இதன் தொடக்கம் தென் அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து ஆரம்பமாகிறது.
முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியன் சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டு கறுப்பாகத் தெரிவது போல, முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் கறுப்பாக.. இருட்டாகத் தெரிவது இல்லை.சந்திரன் முழு கிரகணத்தின் போது காணாமல் ஓடிப் போவதும் இல்லை 

சந்திரன் பூமியின் நிழல் வழியே நகரும்போது, பூமியின் வளிமண்டலம் மூலமாக, சந்திர மறைவுப் பிரதேசங்களில், சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரதிபலிக்கின்றன. பூமியில் வளிமண்டலம் மட்டும் இல்லாதிருந்தால் சந்திரன் கறுப்பு நிலாவாக காட்சி அளிக்கும் 

பூமியின் வளிமண்டலத்தில் பட்டு சந்திரனில் சிதறும் அகச் சிவப்பு ஒளித் துகள்கள்தான் முழு சந்திர கிரகணத்தின்போது அதனை சிவப்பான தாமிர நிற நிலாவாகக் (Copper moon) காட்டுகிறது 


Related

அறிவமுது 2817086396434060166

Post a Comment

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress