வண்ணத்துப் பூச்சி
http://mazalaipiriyan.blogspot.com/2012/11/blog-post_18.html
அழகான தோட்டம்.
ஒரு புதரில் வண்ணத்துப்பபூச்சி கூட்டுப்புழு வடிவில் தொங்கிக் கொண்டிருந்தது.
இதை அந்த வழியே சென்ற ஒருவர் கண்டார்.
வெளியே வருவதற்காகக் கூட்டுப்புழு வளைந்து, நெளிந்த கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தது.
கூட்டுப்ழு வண்ணத்துப் பூச்சியாக மாறுவதற்காகக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டை துளைத்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார்.
பல மணி நேரம் அதை அவர் கவனித்துக் கொண்டிருந்தார்.
அந்த மனிதருக்கு பரிதாபம் ஏற்பட்டது. பாவம் நாம் இதற்கு உதவி செய்தால் என்ன? என்று அவர் தனக்குள் பேசிக் கொண்டார்.
கூட்டுப்புழுவின் கூட்டை லேசாகப் பிய்க்க ஆரம்பித்தார்.
கொஞ்சம் சிரமத்துடன் வண்ணத்துப்பூச்சியையும் வெளியில் எடுத்துவிட்டார்.
ஆனால், அந்த வண்ணத்துப்பூச்சி முழுமையாக வளர்ந்திருக்கவில்லை. இறக்கைகளும் வளர்ச்சியில்லாமல் சிறுத்திருந்தன.
கொஞ்ச நேரத்தில் இறைக்கைகள் வளர்ந்துவிடும் என்று அந்த மனிதர் நினைத்தார்.
அவர் நினைத்தது போல நடக்கவில்லை.
அவர் அந்த உயிரினத்திடம் பரிதாப்பட்டது உண்மைதான். ஆனால், இயற்கைக்கு விரோதமாக அல்லவா அவர் நடந்து கொண்டார்.
கடைசியில் அந்த வண்ணத்துப்பூச்சி ஊனமானதுதான் மிச்சம்!
கூட்டிலிருந்து வெளிவருவதற்கான தொடர் முயற்சியும் அதற்கான போராட்டமும் வண்ணத்துப்பூச்சியின் உடல் வளர்ச்சிக்குத் தூண்டுதல்.அது பறப்பதற்கான விடுதலை
இவை அந்த மனிதருக்குத் தெரியவில்லை.
நமது வாழ்க்கை அமைப்பும் அப்படிதான். நமது சாதனைகளுக்கு முயற்சியும், தொடர்ச்சியான போராட்டமும் அவசியம்.