திருக்குர்ஆன் என்பது என்ன?
http://mazalaipiriyan.blogspot.com/2012/11/blog-post_17.html
திருக்குர்ஆன் இஸ்லாத்தின் புனித நூலாகும்.
திருக்குர்அன் இறைவனின் வாக்கு என்பது முஸ்லிம்களின் நம்பிக்கையாகும்.
அது வானவர் தலைவர் ஜிப்ரீயல் அவர்கள் மூலமாக முஹம்மது நபிகளாருக்கு (ஸல்) அருளப்பட்டது.
நபிகளாரின் தாய் மொழி அரபி என்பதால் திருக்குர்ஆன் அரபியில் இறக்கியருளப்பட்டது.
திருக்குர்ஆன் எல்லா மனிதர்களுக்குமான அறிவுரையாகும். ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ, நாட்டு மக்களுக்கோ, குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ மட்டும் சொந்தமானதல்ல. எல்லா மக்களுக்குமான வாழ்க்கை வழிகாட்டியாகும்.
திருக்குர்ஆன் வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் பேசவில்லை. ஆன்மிகம், சமூகம், அரசியல், பொருளியல், அறிவியல், வானவியல் என்று மனித வாழ்வின் அனைத்துத்துறைகளைப் பற்றியும் பேசுகிறது.
இதுவரை மனிதர்களுக்கு இறைவனால் அருளப்பட்ட வேத நூல்களில் திருக்குர்ஆன் 'லேட்டஸ்ட்டாக' - சமீபகாலத்தில் அருளப்பட்டது.
அதேபோல, பைப்பிள் போன்ற வேதங்களில் நடந்தது போன்ற கூட்டல் - கழித்தல் மாற்றங்கள் திருக்குர்ஆனில் நடந்ததில்லை. ஒரு எழுத்துக்கூட இதுவரையும் யாரும் மாற்றியதில்லை. இதுவே இதன் நம்பகத்தன்மைக்குச் சான்றாகும்.
நபிகளாருக்கு திருக்குர்அன் இறைவனிடமிருந்து இறங்க.. இறங்க.. அது நபித்தோழர்களால் மனப்பாடம் செய்யப்பட்டது.
குர்ஆன் என்பதற்கு திரும்ப திரும்ப ஓதுதல் என்று பொருள்.
ரமளான் மாதத்தில்கூட முழுக் குர்ஆன் ஓதப்படுவது நமக்குத் தெரியும். இமாமை பின்நின்று தொழுபவர்கள் கவனமாக கேட்டு சரிபார்ப்பதும் அறிவோம்.
இறைவேதமான திருக்குர்ஆனை ஓதுவோம். அதன் கட்டளைகளை பின்பற்றுவோம். இதை அடுத்தவர்க்கும் எடுத்துரைப்போம்.
சரிதானே?
--- இறைவன் நாடினால்.. 'கற்பது' தொடரும்.