முஸ்லிம் என்பவர் யார்?
http://mazalaipiriyan.blogspot.com/2012/11/blog-post_21.html
இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்பவர் முஸ்லிம் எனப்படுவார்.
இஸ்லாம் என்பது அரபி சொல். கீழ்ப்படிதல், அடிபணிதல் என்பது அதன் பொருள்.
அமைதி என்றொரு பொருளும் அதற்குண்டு.
யார் யார் எல்லாம் இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ்கிறார்களோ.. நடக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் முஸ்லிம்கள். அப்படி கீழ்ப்படிந்து நடப்பதால் அவர்களது வாழ்வில் அமைதி கிடைக்கும் என்பது இதன் பொருள்.
உலகத்தில் நம்மைச் சுற்றியிருக்கும் சக படைப்புகள் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றன. நம்மைச் சுற்றியும் அமைதி கிடைக்கிறது. நமது உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் இதேபோல இறைக்கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்பதால் மனித உடலில் அமைதி கிடைக்கிறது.
ஆக இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்.. நடப்பவை அனைத்தும் முஸ்லிம்கள்தான். இறைவனின் அடிமைகள்தான்.
-- இறைவன் நாடினால்.. கற்பது தொடரும்.
-- இறைவன் நாடினால்.. கற்பது தொடரும்.