ரியாஸ் எழுத்தாளனாகின்றான் - பகுதி - 2
http://mazalaipiriyan.blogspot.com/2012/11/2.html
ஆரம்பத்தில் மாமா சிறிது நாள்வரை சொந்த அனுபவங்களை எழுதச் சொன்னார்.
அதுவும் சின்ன சின்ன வாக்கியங்களாக.
பிறகு ஒருநாள் ரியாஸிடம், "இனி கண்ணால் பார்ப்பதையும் எழுதணும்!" - என்றார்.
""கண்ணால் பார்ப்பதா? புரியலியே மாமா..!" - ரியாஸ் சந்தேகம் கேட்டான்.
"நம்மைச் சுற்றி தினமும் எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன. அவற்றைச் சற்று உற்றுப் பார்க்கணும். அவற்றை அப்படியே எழுத்தில் சொல்லணும். கோர்வையாய்... சுவையாய்.. அதோ அங்கே பார்..!"
ஒரு சிறுவன் வருகின்றான். அவன் ஒரு கழியை எடுக்கின்றான். சுவற்றில் அடிக்கின்றான். அடடா.. என்ன இது?
சிறுவன் அடித்த இடத்திலிருந்து குளவிகள் பறந்து வருகின்றனவே!
பறந்து வந்த குளவிகள் சிறுவனை சுற்றிச் சூழ்ந்தன.
"ஆஹ்! அவன் பள்ளத்தில் விழுந்துவிட்டானே!"
"வா.. வா.. ரியாஸ்.. ஓடிப்போய் அவனுக்கு உதவி செய்வோம்!"
மாமாவும் ரியாஸீம் சிறுவனிடம் ஓடினார்கள்.
குளவிகள் இன்னும் தலைக்கு மேல் பறந்து கொண்டிருந்தன. அவர்கள் சிறுவனைப் பள்ளத்திலிருந்து வெளியே தூக்கி விட்டார்கள். பக்கத்திலிருந்து மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். அடிபட்ட இடங்களுக்கு மருந்து போட்டார்கள்.
சிறுவனிடம் முகவரி கேட்டு அவனை வீட்டில் பத்திரமாய் சேர்த்து விட்டுத் திரும்பினார்கள்.
வீட்டிற்கு வந்ததும் மாமா ரியாஸிடம், "பார்த்தாயா.. ரியாஸ்? அந்த சிறுவனின் குறும்புத்தனத்தால் நடந்த நிகழ்வுகளை. அதனால் அவன் அனுபவித்த வேதனைகளையும் கண்டாய் அல்லவா?"
இது போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. இதை அடுத்தவர்க்கு நாம் அறிவுரையாக சொல்லலாம்.
இப்படி ஏதாவது சம்பவங்களைப் பார்த்தால் அதையும் எழுது ரியாஸ் - என்றார் மாமா.
சரி.. ரியாஸ் என்ன எழுதினான்? அடுத்தவாரம் --- இறைவன் நாடினால் பார்ப்போமா?