முஸ்லிம்களின் பொறுப்புகள் என்னென்ன?
http://mazalaipiriyan.blogspot.com/2012/11/blog-post_23.html
முஸ்லிம்கள் என்னும் வட்டத்தில் வர வேண்டும் என்றால் அவர்கள் மீது ஐந்து பொறுப்புகள் கடமையாகின்றன. இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் எனப்படும் அவற்றை சரியான முறையில் நிறைவேற்றும் போதுதான் அவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும். இல்லையென்றால் பெயரளவில் முஸ்லிம்கள் என்றுதான் அழைக்கப்படுவார்கள். ஒரு போலியான டாக்டர் போல இவர்களும் மற்றவர் கண்ணுக்கு வேண்டுமானால் முஸ்லிம்களாக இருக்கலாம். கொள்கை ரீதியாக இவர்களை உதாரணங்களாக கொள்ள முடியாது.
முஸ்லிமாவதற்கு முதல் பொறுப்பு:
"வணக்கத்துக்குரியவன் ஓர் இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை! முஹம்மது நபிகள் அல்லாஹ்வின் இறுதித்தூதர் ஆவார்கள்!"
ஒரு சொற்றொடரின் இரண்டு வாக்கியங்கள் இவை.
முஸ்லிமாவதற்கு இரண்டாவது பொறுப்பு:
தொழுகை. இறைவனுக்கு உடலால் நன்றி செலுத்தும் வழிமுறை.
என்று ஒருநாளில் ஐந்து முறை கஅபாவை முன்னோக்கி தொழுவது கட்டாய கடமையாகும்.
தொழுகைக்கான நேரம் வந்ததும் அவரவர் வசதிக்கேற்ப தொழுது கொள்ள வேண்டும்.
தொழுகைக்கான நேரம் வந்ததும் அவரவர் வசதிக்கேற்ப தொழுது கொள்ள வேண்டும்.
வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் மதியம் வாராந்திர சிறப்புத் தொழுகை நடைபெறும். 'அது ஜும்ஆ' தொழுகை எனப்படும்.
முஸ்லிமாவதற்கு மூன்றாம் பொறுப்பு:
ஜகாத் எனப்படும் சமூக நலநிதி. ஆண்டுக்கு ஒருமுறை தங்களின் வருமானம் குறிப்பிட்ட வரையரை தாண்டும் போது அதிலிருந்து குறிப்பிட்ட பகுதியை தனியாகப் பிரித்து அதற்கான அமைப்பில் சேர்த்துவிடுவது ஜகாத் எனப்படும். இது ஏழைகளின் உரிமையாகும் அதாவது செல்வந்தர்களின் செல்வத்தில் கலந்துள்ள ஏழைகளின் சொத்து. அதை தேவையுள்ளோருக்குக் கொடுத்து தனது சொத்தை தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
இது சமூக நலனுக்காக பயன்படுத்தும் நிதி ஆதாரமாகும்.
முஸ்லிமாவதற்கு நான்காம் பொறுப்பு:
நோன்பு. ரமளான் மாதத்தில் அதிகாலை
குறிப்பிட்ட நேரத்திலிருந்து சூரியன் மறையும்வரையிலான குறிப்பிட்ட காலம்
வரை உண்ணாமல், நீர் அருந்தாமல் இருப்பது. சாதாரண காலங்களில்
அனுமதிக்கப்பட்டவைகளிலிருந்து விலகி இருப்பது.
முஸ்லிமாவதற்கு ஐந்தாம் பொறுப்பு:
கஆபாவை சந்திக்கச் செல்வது அதாவது ஹஜ் செய்வது.
உடலாலும், பொருளாலும் வசதிப்படைத்தவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை மக்காவிலுள்ள கஆபாவை சந்திக்கச் செல்வது.
ஆக, "வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை! முஹம்மது நபிகள் இறைவனின் தூதர்!" - என்ற உறுதி மொழியை மேற்கொள்பவர் முஸ்லிம் எனப்படுகிறார்.
அதன் பிறகு தொழுகை, ஜகாத், நோன்பு, மற்றும் ஹஜ் கடமைகள் பொறுப்பாகின்றன.
உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் ஒரே நேரத்தில், ஒரே காலத்தில் ஒன்றாக வாழ்கையில் மேற்கொள்ளும் பொறுப்புகள் இவை.
இவர்தான் முஸ்லிம் எனப்படுவார்.