மதிப்பு மிக்கவர் நீங்கள்!
http://mazalaipiriyan.blogspot.com/2012/11/blog-post_19.html
புகழ்பெற்ற
பேச்சாளர் ஒருவர் ஒரு கருத்தரங்கில் பேச வந்தார்.
அந்தக்
கருத்தரங்கில் கலந்துகொள்வதற்கு ஏராளமானோர் வந்திருந்தனர்.
பேச்சாளர்
தன்னிடமிருந்த ஒரு வைரக்கல்லை எடுத்தார்.
அதை
அங்கிருந்தோரிடம் காட்டினார்.
“இது
என்ன?” - என்று கேட்டார்.
“வைரம்!”
- என்றார்கள் அவர்கள்.
“இது
யாருக்கு வேண்டும்?”
“எனக்கு..
எனக்கு..” - என்று அறையிலிருந்த எல்லோரும் கையைத் தூக்கினார்கள்.
“இருப்பது
ஒரு வைரம். அதை ஒரு நபருக்குத்தான் தரமுடியும். அதனால்.. முதலில் யார் கையைத் தூக்குகிறார்களோ
அவர்களுக்கு..”
அவர்
சொல்லி முடிக்கவில்ல. எல்லோரும் சட்டென்று கையைத் தூக்கினார்கள்.
“நல்லது!”
- என்று சிரித்தவாறு அவர் அந்த வைரத்தைத் தரையில் போட்டார். அதை காலால் மிதித்து
.. தேய்த்து.. அழுக்கு ஆக்கினார்.
“இப்போது
யாருக்கு இது வேண்டும்?” - என்று திரும்பவும் கேட்டார்.
இப்போதும்கூட
எல்லோரும் கையைத் தூக்கினார்கள்.
கருத்தரங்கில்
பேச வந்தவர் சொன்னார்:
“நண்பர்களே!
இப்போது நீங்கள் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொண்டீர்கள். அது வைரத்தை என்ன செய்தாலும்
பரவாயில்லை. தரையில் விழுந்தாலும், அழுக்கானாலும் அது மதிப்பில் குறைவதில்லை. ஏனென்றால்..
அதன் மதிப்பு உயர்ந்தது.
வாழ்க்கையும்
இப்படிதான்! பலமுறை பல பிரச்சினைகள் நமக்கு ஏற்படலாம். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள்
பெறலாம். சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக தேர்ச்சி பெறாமலும் போகலாம். துன்பங்கள்,
துயரங்கள் ஏற்படலாம். நமது முடிவுகள் அதற்கு காரணமாக இருக்கலாம் அல்லது சூழல்களும்
காரணமாக இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில் நம்மை நாம் மதிப்பு மிக்கவர்களாகவே கருத
வேண்டும்.
அந்த
அறையில் இருந்தவர்கள் அவர் சொல்வதை கவனமாகக் கேட்கலானார்கள்.
அவர்
தொடர்ந்து சொன்னார்:
“வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் அல்லது நடக்கலாம். அந்தப்
பளபளக்கும் வைரத்தைப் போல.. அல்லது குப்பையில் விழுந்த அந்த அழுக்கு வைரத்தைப் போல..
எப்படியானாலும் உங்கள் வாழ்க்கையைப் போலவே நீங்களும் விலை மதிப்பற்றவர்தான், ஞாபகத்தில்
வையுங்கள் நண்பர்களே!”