கஅபா என்பது என்ன?
http://mazalaipiriyan.blogspot.com/2012/11/blog-post_8515.html
மக்காவிலுள்ள பள்ளிவாசல் வளாகத்துக்குள் அமைந்துள்ள சதுர வடிவிலான கட்டிடமே கஅபா எனப்படுகிறது.
இறைத்தூதர் இப்ராஹீம் நபி (ஆப்ரஹாம்) மற்றும் இஸ்மாயீல் நபி (இஸ்மவேல்) இருவரும் சேர்ந்து கஅபாவை கட்டினர்.
கஅபாவுக்குள் எதுவும் இருக்காது. ஆண்டுக்கு ஒருமுறை சுத்தம் செய்யதான் உள்ளே செல்வார்கள்.
கஅபாவைச் சுற்றியும் கருப்புத்துணி திரைச்சீலைகள் தொங்க விடப்பட்டிருக்கும்.
இந்த கருப்புத் துணிக்கு கிஸ்வா என்று பெயர்.
திருக்குர்ஆன் வசனங்கள் தங்க இழைகளைக் கொண்டு கிஸ்வாவில் கலைநயத்தோடு நெய்யப்பட்டிருக்கும்.
கிஸ்வா ஆண்டுக்கு ஒருமுறை மாற்றப்படும்.
உலகின் பல பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்கள் அனைவரும் கஅபா இருக்கும் திசையை நோக்கிதான் தொழுகிறார்கள்.
ஹஜ் காலத்தில் யாத்திரிகர்கள் கஅபாவைச் சுற்றி ஏழு முறை வலம் வருவார்கள். இதற்கு தவாப் என்று பெயர்.
-- இறைவன் நாடினால் கற்பது தொடரும்.