மசூதி என்பது என்ன?

http://mazalaipiriyan.blogspot.com/2012/11/blog-post_27.html
மஸ்ஜித் எனப்படும் மசூதி - பள்ளிவாசல் முஸ்லிம்கள் இறைவனை வழிபடும் இடமாகும்.
மசூதிகள் 'மினார்கள்' என்னும் கோபுரங்களைக் கொண்டிருக்கும்.
மசூதியில் தொழுகைக்காக அழைப்பவர் 'முஅத்தீன்' எனப்படுவார்.
தொழுகைக்கான அழைப்பு 'அதான்' அல்லது 'பாங்கு' எனப்படும்.
கூட்டுத் தொழுகைக்காக மசூதியில் தலைமைதாங்கி நடத்துபவர் 'இமாம்' என்று அழைக்கப்படுவார்.
முகம்-கை,கால்களை முறையாகச் சுத்தம் செய்வதற்கு 'ஒளு' என்பார்கள்.
ஒளு செய்வதற்கு வசதியாக மசூதியில் செயற்கையான நீர் நிலைகளோ (இவை 'ஹவுள்' எனப்படும்) அல்லது குழாய்களோ இருக்கும்.
மசூதி இறைவனைக் கூட்டாக வழிபடுவதற்கான கூடம்.
'தர்கா' என்பது நல்லடியார்களின் அடக்கத்தலம்.