ரியாஸ் எழுத்தாளனாகின்றான் - பகுதி - 3

ரியாஸ் ஒரு சம்பவத்தைக் கண்டான்.

அதை எழுத ஆரம்பித்தான்.

ஒரு சிறுவன். அவன் பூனைக்குட்டியை எடுத்துச்  சென்று கொண்டிருந்தான்.

பூனைக்குட்டி, 'புஸீ புஸீ' வென்று அழகாக இருந்தது.நடு வழி.

திடீரென்று ஒரு நாய் வந்தது.

பூனைக் குட்டி பயந்து போனது. 'உர்' என்று சீறியது. உடலைச் சிலிர்த்துக் கொண்டது.

நாய் குலைக்க ஆரம்பித்தது.

பயந்து போன பூனைக்குட்டி சிறுவன் பிடியிலிருந்து விடுபடத் திமிறியது.

அதனால், சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது.

அவனுடைய பிடி தளர்ந்தது.பூனைக்குட்டி தரையில் குதித்தது.

உடலைச் சிலிர்த்துக் கொண்டு நாலுகால் பாய்ச்சலில் புதருக்குள் ஓடி மறைந்தது.

சிறுவன் பூனை பிராண்டியதால் அழுதவாறு சென்றான்.

இதை ரியாஸ் எழுதினாலும் அவனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

அதனால், இன்னொரு சம்பவத்தை எழுதத் தொடங்கினான்.

- ரியாஸ் எப்படி எழுதினான்? இறைவன் நாடினால்.. அடுத்தவாரம் பார்ப்போமா?


Related

சிறுவர் தொடர் 8719902568248870174

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress