அறிவமுது: 'தொலைந்து போனால்.. இனி பதட்டம் வேண்டாம்!'
http://mazalaipiriyan.blogspot.com/2013/05/blog-post_25.html
உங்கள் செல்பேசி அதாவது மொபைல் போன் கவனக் குறைவாக தொலைந்து போனாலோ அல்லது திருட்டுப் போனாலோ தயவு செய்து பதட்டம் அடைய வேண்டாம்.
இப்படிப்பட்ட தருணங்களில் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட நெட்வொர்க் ஆபரேட்டர்களைத் தொடர்ப்பு கொண்டு நடந்ததைச் சொல்லி உங்கள் சிம்கார்ட்டை முடக்கச் சொல்லுங்கள்.
அடுத்ததாக காவல்துறைக்கு முறையாக ஒரு புகார் செய்வது அவசியம். இந்த புகாரின் போது, செல்பேசியின் அடையாள எண் (IMEI International Mobile Equipment Identity) குறிப்பிடப்பட வேண்டியது அவசியம். இதை தெரிந்து கொள்ள *#06# தட்டச்சு செய்து டயல் செய்தால் பதினைந்து இலக்க எண் கிடைக்கும்.
- உங்களது பெயர்
- முகவரி
- தயாரித்த நிறுவனப் பெயர்
- போன் மாடல்
- இறுதி யாக டயல் செய்த எண்
- தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி
- தொலைந்த தேதி மற்றும்
நமது காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.
தொலைந்து போன அல்லது திருட்டுப் போன செல்பேசி பயன் படுத்தப்படும் போது, அது எங்கிருந்து யாரால் பயன்படுத்தப்படுகிறது என்று கண்டறியப்பட்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.