குழந்தை வளர்ப்பு: 03, 'உலகாயத விலங்கல்ல மழலை!'இன்றைய நவீன கல்வி அமைப்பும், புற வாழ்க்கையின் அம்சங்கள் அனைத்தும் மனிதனை உலகாயத வாழ்க்கையின் விலங்காக்கி விட்டுள்ளன. 

மதுவும், போதை மருந்துகளும், ஆபாச கேளிக்கைகளும், ஒழுக்க நெறிகளின் புறக்கணிப்புமாய் நிகழ்காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஒழுக்கச் சுற்றுச்சூழல் மாசுவால் இளைய தலைமுறையினரின் உள்ளங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன. 

குபேர நாடுகளின் நிலை சொல்லிக் கொள்ளத் தக்கதாக இல்லை. உலகின் 'சூப்பர் பவர்' என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் சமூக நிலையோ பெரும் தள்ளாட்டத்தில் உள்ளது. 1840-களில், பள்ளி வரந்தாக்களில் ஆடி – ஓடுவதும், சூயிங் கம் சாப்பிடுவதும், உரக்கச் கூச்சலிடுவதும் கொடிய குற்றங்களாக கருதப்பட்டதுண்டு. ஆனால், தற்போதோ போதை மருந்துகள், கற்பழிப்புகள், கொலை, கொள்ளைகள், வெடிகுண்டு வீச்சுகள், துப்பாக்கி சூடுகள் போன்றவை அதே அமெரிக்க மாணவர்களின் அன்றாட வாழ்க்கையாகிவிட்டது.  

1950 – 1979  வரையிலான காலகட்டத்தில் மட்டும் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்புகளில் ஈடுபட்டு கைதான இளைஞர்களில் 11,000 பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் (ஆதாரம்: ‘கிறிஸ்டியானடி டுடே’ மே, 18 – 1984). வீடுகளில் ஒரு சிறிய கம்பி வழியே ஒளிப்பரப்பாகும் டி.வி. நிகழ்ச்சிகள் இளைய தலைமுறையினரை பெரும் பாதிப்புக்குள்ளாக்கி வன்முறைியின் பக்கம் செலுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


தொலைக்காட்சியில் காட்டப்படும் வன்முறைக் காட்சிகள் இளைய தலைமுறையினரை சீர்க்குலைக்கின்றன. அமெரிக்காவில் பதிவான 14 ஆயிரம் பாலியல் குற்றங்களில் 80 விழுக்காடு பேர் தொலைக்காட்சியின் பாதிப்பால் குற்றங்களில் ஈடுபட்டவர்கள்.. திருமணமாகாத சிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
  • 7.5 நிமிடத்துக்கு ஒருமுறை தொலைக்காட்சியில் மது அருந்தும் காட்சியும், 
  • 16 தடவைக்கு 15 தடவைகள் மது ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் காட்சிகள் இடம் பெறுகின்றன. (ஆதாரம்: Raising Positive Kids in a Negative World, P.No. 19-26)
ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் ஆடி – ஓடி விளையாட வேண்டிய குழந்தைகள் தொலைக்காட்சி அடிமைப்படுத்தியுள்ளது. “இது குழந்தைகளின் சிந்திக்கும் திறனை, கற்பனை வளத்தைப் பாதிப்பதாக” ‘சிகாகோ டி பால் பல்கலைக்கழகத்தைச்’ சேர்ந்த உளவியல் மருத்துவத்துறையின் இயக்குனரான ‘பேட்டி ரிபக்’ கூறுகின்றார். 
தொலைக்காட்சியின் வழியே கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகளும் ஒளிப்பரப்பப்படுகின்றன. இது உண்மையானாலும், ஒட்டுமொத்த நிகழ்ச்சிகளைக் கணக்கெடுத்தால்.. நன்மைக்குப் பதிலாக தீமைகள்தான் அதிகம் விளைகின்றன. 
மேலை நாடுகளில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, தொழிலாளர்கள் வாரந்தோறும் சராசரியாக 30 மணி நேரம் தொலைக்காட்சியின் முன் செலவிடுகிறார்கள். அவர்களது மேலதிகாரிகளோ 25 மணி நேரமும், ஃபோர்மென் 20, பிளாண்ட் மேனேஜர் 15, துணைத் தலைவர் 12-15 மணி நேரமும், தலைவரோ 8-12 மணி நேரமும் தொலைக்காட்சியின் முன் செலவழிக்கின்றனர். சுற்றுச்சூழல்களின் பேராபத்து இது.
திருக்குர்ஆன் – திருநபி வழியில் குழந்தை வளர்ப்பு என்பது திட்டமிட்டச் செயலாகும். பாத்திகளில் பயிர்களை மிகவும் கவனத்துடன் வளர்ப்பது போன்ற பிரத்யேகமான பணியாகும். வளர்ந்துவரும் உலகின் ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் தீர்வுகளை திருக்குர்ஆன் – திருநபி வழியில் பாதை அமைத்துத் தர வேண்டிய மிக முக்கியப் பொறுப்பாகும்.
இந்தியாக போன்ற வளரும் நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. வாழ்க்கை ஜீவனுக்கான தேடலுக்குத்தான் அவர்களின் பிரதான நேரம் செலவிடப்படுகிறது. இதனால் அவர்களது கொள்கை, கலாச்சாரம், வாழ்க்கைமுறை பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இஸ்லாமிய வாழ்க்கை நெறி உண்மையானதுதான் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் உறுதியாக இருந்தாலும் சமூகப் புறச்சூழல்களின் பாதிப்பு அவர்களையும் விட்டு வைக்கவில்லை.
இதேபோலதான், மச்சு வீட்டு சீமான்களும். உலகாயத வாழ்க்கையும், மேற்கத்திய சிந்தனைகளும் அவர்களை இஸ்லாமிய கொள்கையிலிருந்து வழுவச் செய்துவிட்டன. இதன் விளைவாக தங்கள் இறைநம்பிக்கையின் சான்றாக விளங்கும் உறுதிமொழி ‘லா இலாஹா இல்லல்லாஹ்! முஹம்மதுர் ரஸீலுல்லாஹ்!’ – வெறும் இரண்டு வரி சொற்றொடர்களாகி விட்டன. 

இஸ்லாமிய வாழ்க்கை நெறியைச்  செயல்படுத்த மிகவும் இன்றியமையாது விளங்கும் இஸ்லாமிய கல்விக்கும், அறிவுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான தொலைவு அதிகரித்துவிட்டது. 

இத்தகைய சூழலில் பிறச் சமூகக் கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளின் தாக்கங்கள் முஸ்லிம்களை விட்டு வைக்கவில்லை. கொள்கைகக் கலப்படத்தில் அவர்களை முக்கிவிட்டது. இதானல்தான் முஸ்லிம்களில் பெரும்பாலோர் ‘பெயர்தாங்கிகளாக’ (So Called) விளங்குகிறார்கள். 

அதேபோல, இன்னும் சிலரோ தொழுகையாளிகளாகவும், நோன்பாளிகளாகவும் இருக்கிறார்கள். அதாவது வணக்கமுறைகளில் மட்டும் இஸ்லாத்தைப் பேணுதலாக இவர்கள் பின்பற்றுகிறார்கள். ஆனால், சமூகத்தின் பிற துறைகளான அறிவியல், பொருளியல், அரசியல் இவைகளில் 'டார்வின்' போன்ற விஞ்ஞானிகளையும், 'மார்க்ஸ்' போன்ற அறிஞர்களையும் இன்னும் பிற அரசியல் தலைவர்களையும் தங்கள் வழிகாட்டிகளாக.. தலைவர்களாக.. ‘ரஸீல்களாக’ ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இறைவன் வணக்கத்துக்குரியவன் மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கான சட்டங்களையும் தந்திருப்பவான் – இலாஹ் – என்பதுதான் கலிமாவின் முற்பகுதி. நபிகளார் இறைவனின் திருத்தூதராக இருப்பதுடன் இறைநம்பிக்கையாளர்களின் அரசியல், பொருளியல், அறிவியல் போன்ற அனைத்து விவகாரங்களுக்கும் வழிகாட்டியாக இருப்பவர்கள் என்பதுதான் கலிமாவின் பிற்பகுதி.
-    தொடரும்.  

Related

குழந்தை வளர்ப்பு 8070317826689294

Post a Comment

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress