அறிவமுது: 'புளூடூத்'
http://mazalaipiriyan.blogspot.com/2013/06/blog-post_6.html
புளூடூத் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டிருந்தால்..
அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். ஆனால்
இன்றோ பள்ளி சிறார்கள்கூட அதன் பயன்பாட்டை தெரிந்திருக்ககிறார்கள்.
சரி.. பல்லுக்கும் இந்த
உபகரணத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லாமல் எதற்காக ‘புளூ டூத்’
என்று பெயர் வைத்தார்கள்? இந்த வார்த்தை ‘பிலாட்டென்ட்’ அல்லது ‘பிலாட்டன்’ எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவமாகும்.
பத்தாம் நூற்றாண்டில், டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்தவர்
அரசர் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர்! அதனால் தான் ‘இணைக்கும் தொழில்நுட்பத்துக்கு’ அவருடைய பெயரான ‘புளூடூத்’ எனும் பெயரை வைத்தார்கள்.
புளூடூத் குறியீடை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும். அது முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன்
கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவமாகும்.
புளூடூத் ஒரு
குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறை. உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்ள
இந்த முறைமையால்
முடியும். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு
கொண்டவை அவை !