அறிவமுது: 'மிதக்கும் கற்கள்!'


 

எதிர் வீட்டு மாமா சிரித்துக் கொண்டே வந்தார். அவரது கையில் ஒரு சிறிய கல். பிள்ளைகளை அருகில் அழைத்து, "குழந்தைகளே! இதோ இதை பாருங்கள்!" - என்று அதை காட்டவும் செய்தார்.

"கல்..!" - என்றார்கள் பிள்ளைகள்.

"ஆமாம்! கல்தான்! யாராவது வீட்டில் சென்று ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் கொண்டுவாருங்கள்!" - என்றார் மாமா.

பிள்ளைகளில் ஒருவன் ஓடி சென்று மாமா சொன்னதுபோலவே தண்ணீர் கொண்டு வந்தான்.

மாமா கையிலிருந்த கல்லை கண்ணாடி டம்ளரில் போட்டார். 

தண்ணீரில் கல் முழுகுவதற்கு பதிலாக அது மிதக்கலாயிற்று.

பிள்ளைகளுக்கு ஒரே ஆச்சரியம்!

அதைப் பார்த்த மாமா சிரித்தவாறே, "இதில் மாயமோ, மந்திரமோ ஏதுமில்லை.. பிள்ளைகளே! தண்ணீரில் கல் மிதப்பது அதிசயம் ஒன்றும் இல்லை. இது ஒரு இலகுவான இயற்பியல் தான்!" - என்றவாறு விளக்க ஆரம்பித்தார்.

 "... தண்ணீரில் மிதக்கும் கற்கள் எவ்வாறு உருவாகின்றன தெரியுமா? எரிமலை வெடிக்கும் பொழுது, அதிலிருந்து வெளிவரும் எரிமலை குழம்பு பெரும்பாலும் திரவ நிலையிலான கற்களும் பாறைகளுமாகவே இருக்கும்!.

இவ்வாறு மிகுதியான வெப்பநிலை கொண்ட கற்குழம்பு, குறைவான அழுத்தத்தினாலும் வெகு விரைவாகக் குளிர்வதாலும், கற்குழம்புக்கிடையே காற்றுக் குமிழ்கள் (air bubbles) தோன்றுகின்றன.

கற்குழம்பில் கலக்கும் கரிவளி, அதில் நுரை தோன்ற வழி வகுக்கின்றது. குளிர்பானத்தைத் திறக்கும் பொழுது காற்றோடு கலக்கும் பானம் நுரையை ஏற்படுத்துவது போல இந்த மாற்றம் நிகழ்கிறது.

நீரில் மிதக்கும் கற்கள் பெரும்பாலும் வெளிர் நிறத்தில் காணப்படும்!..."

மாமா சொல்வதை பிள்ளைகள் ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

" ..... பிள்ளைகளே! கடலுக்கு அடியில் ஏற்படும் எரிமலை வெடிப்புகளும் கடலின் மேற்பரப்பில் மிதக்கும் கற்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கின்றன.

எடுத்துக்காட்டாக 2006-ஆம் ஆண்டு, ஃபிஜி அருகே தென்-பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகள் ஃபிஜி தீவுகளிடையே பல மிதக்கும் கற்களைத் தோற்றுவித்துள்ளன.

இப்படி 30 கி.மீ வரையிலான பரப்பளவு கொண்ட கற்கள் , ஃபிஜி அருகே கடலில் மிதக்கின்றன.

பெரிய பரப்பளவைக் கொண்ட மிதக்கும் எரிமலை கற்கள் ஆங்கிலத்தில் 'மிதக்கும் கற்கப்பல்கள்' என்றழைக்கப்படுகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன் பெரிய பரப்பளவு கொண்ட மிதக்கும் கற்களைக் கப்பல் போல பயன்படுத்திதான் விலங்குகள் ஒரு தீவை விட்டு மற்றொரு தீவுக்குப் புலம் பெயர்ந்ததாக உயிரியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சரி.. பிள்ளைகளே.. நான் புறப்படட்டுமா?" - என்றவாறே மாமா அங்கிருந்து கிளம்பினார்.

மிதக்கும் கற்களைக் குறித்துத் தெரிந்து கொண்ட பிள்ளைகளும் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றார்கள்.


Related

அறிவமுது 6086379449699776351

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress