அறிவமுது:'மருந்து நஞ்சாகலாம் எச்சரிக்கை!'

எங்கள் பகுதியில் ஒரு மருந்து கடை இருக்கிறது. கடைக்காரர் எனது நண்பர். அதனால், அவரைச் சந்திக்க அடிக்கடி செல்வேன். கூட்டம் அதிகமாக இருக்கும். மருந்து கடையில் மருந்து வாங்க வருபவர்களில் பாதிபேர், 'மருத்துவரின் சீட்டு' இல்லாமல்தான் வருவார்கள். உடம்பின் பிரச்னைகள் குறித்து பாடமாய் ஒப்புவிப்பார்கள். மருந்து கடைக்கார நண்பர் மருத்துவரிடம் காட்டிவிட்டு வரும்படி அறிவுறுத்துவார். ஆனால், அதை யாரும் பொருட்படுத்துவதில்லை. காய்ச்சல், தலைவலி, பல்வலி, உடல் வலி என நீண்ட பட்டியலை அவர்கள் ஒப்புவிப்பார்கள்.
இது மருந்து கடைகள் மீதுள்ள நமது நம்பிக்கையை வெளிப்படுத்தினாலும், மருந்து கடைகளில் நமக்கு சரியான மருந்து, மாத்திரைகள் தான் தருகிறார்களா என்பதை பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. குறைந்தபட்சம் நமக்குத் தரும் மாத்திரைகள் சம்பந்தமான பெயர்கள் குறித்தும் நமக்குக் கவலை இல்லை. அந்தளவுக்கு மெடிக்கல் ஷாப்களை கண்மூடித்தனமாக நம்புகிறோம்.

ஆனால், உண்மை என்னவென்றால், பெரும்பாலான மருந்து கடைகளில் சரியான மருந்தை தேர்வு செய்து தரக்கூடிய பார்மாசிஸ்ட்கள் எனப்படும் மருந்தாளுனர்கள் இல்லை என்பதுதான் வேதனை. சமீபத்தில் நடத்தப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் அதிரடி சோதனை முடிவுகளும் இந்த உண்மையை நிரூபித்து பீதியை கிளப்பி உள்ளன.

தற்போது சென்னையில் தெருவுக்கு தெரு மருந்து கடைகள் முளைத்து விட்டுள்ளன. இவற்றில் பல 24 மணி நேரமும் இயங்குகின்றன.

'டிப்ளமோ இன் பார்மாசிஸ்ட்' படித்த ஒருவரது மேற்பார்வையின் கீழ்தான் மெடிக்கல் ஷாப்கள் இயங்க வேண்டும். அந்த துறையில் படித்தவர்களுக்கு மட்டுமே மருந்து கடைகள் வைக்க அனுமதி வழங்கப்படும்.

ஆனால், வெறும் லாப நோக்கத்தை மட்டுமே குறியாக கொண்ட சிலர், 'டி-பார்ம்' படித்த உறவினர்களின் சான்றிதழை வைத்து கடையை திறந்து விடுகின்றனர். அப்படிப்பட்ட கடைகளில் பார்மாசிஸ்ட்டுகளே இருப்பதில்லை. மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்த அனுபவத்தின் அடிப்படையில் மருந்துகளை தருகின்றனர். இதனால், தவறான மருந்துகளை தர வாய்ப்புள்ளது, அப்படி தவறான மருந்தை நாம் சாப்பிடுவதால் பயங்கர எதிர்விளைவுகளை சந்திக்கவும் வாய்ப்பிருப்பதாக மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்கின்றனர்.


  • கடந்த 2009&10ம் ஆண்டில் 215 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
  • இதில், 52 கடைகளில் பார்மாசிஸ்ட் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
  • 2010-2011ம் ஆண்டில் 300 கடைகளில் சோதனை நடத்தி, 85 கடைகள் சிக்கின.
  • 2011-2012ல் 202 கடைகளில் சோதனை நடத்தி 86 கடைகளும், 2012&13ல் 228 கடைகளில் சோதனை நடத்தி 106 கடைகளும் பிடிபட்டுள்ளன.
  • கடந்தாண்டு நவம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட சோதனையில் 132 கடைகளில் 61ல் பார்மாசிஸ்ட் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
  • தமிழகம் முழுவதும் 38 சதவீத மெடிக்கல் ஷாப்களில் பார்மாசிஸ்ட்கள் இல்லை என்பது சோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

அதனால், மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவர்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்பார்மாசிஸ்ட் இல்லாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அவர்களின் லைசன்சை ரத்து செய்வதற்கு கூட சட்டத்தில் இடமுண்டு

ஒவ்வொரு மருந்து கடையிலும், பார்மாசிஸ்ட் அவசியம் ஏன் என்றால், அவர் வெறும் மருந்து, மாத்திரை எடுத்து தருவதோடு மட்டுமல்லாமல், மருத்துவரின் மருந்து சீட்டையும் ஒப்பிட்டு மாத்திரைகள் தருவர். அதற்கு அவர் பொறுப்பும் உள்ளது என்கிறது சட்டம். குறிப்பிட்ட நோய்களுக்கு மருந்து எழுதி கொடுத்த டாக்டர் அதற்கான ஸ்பெஷலிஸ்டா என்பதை பார்த்துத் தர வேண்டும். இல்லாவிட்டால் மருந்து வாங்குபவரிடம் அந்த விஷயத்தை தெளிவுபடுத்திட வேண்டும். அதேபோல, ஏஜென்சிகளிடமிருந்து மருந்தை வாங்கும் போது, நிறுவனம், மருந்துகளின் காலாவதி தேதி ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.

மருந்து கடைகளில் மருந்துக்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள்:

  • மிகக்குறைந்த விலைக்கு மருந்து தருபவர்களிடம் மருந்துகள் வாங்க வேண்டாம்.
  • மருந்து, மாத்திரை வாங்கினால் அவற்றின் பெயரை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
  • காலாவதி தேதியை பார்க்க வேண்டும்.
  • டாக்டர் மருந்து சீட்டுடன்தான் மருந்து வாங்க வேண்டும்.
  • அனுமதி பெற்ற மருந்து கடைகளில் மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும்.
  • உங்கள் பகுதி மருந்து கடைகளில் தவறான மருந்துகளை விநியோகம் செய்வதாக தெரிந்தால், 044-24335201, 24335068 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் செய்ய முடியும்.
உடல் நோய்களை குணமாக்கும் மருந்துகள் சில நேரங்களில் நஞ்சாகி விடலாம்.  எச்சரிக்கை.

Related

அறிவமுது 1631797406743906140

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress