அறிவமுது:'நூற்றாண்டை கடந்த பாலம்''
http://mazalaipiriyan.blogspot.com/2014/02/blog-post_25.html
பாம்பன் பாலம் கட்டுவதற்காக,
- கடலுக்குள் 146 தூண்கள்
- 4 ஆயிரம் டன் சிமெண்ட்
- 1 லட்சத்து 36 ஆயிரம் கனசதுர அடி மணல்
- 80 ஆயிரம் கன சதுர அடி பெரிய பாறைகள்
- 2,200 டன் எஃகு
- ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
கப்பல் செல்வதற்கு பாலம் திறக்கப்பட வேண்டும். இதற்கு பாம்பன் துறைமுக அலுவலர், மண்டபம் ரயில் நிலைய அதிகாரிகள் ஆகியோரின் கூட்டாண அனுமதி இருந்தால் மட்டுமே பாலம் திறக்கப்படும்.
காற்றின் வேகம் 58 கி.மீக்கு அதிகமாக இருந்தால் தானியங்கி சிக்னல் செயல்பட்டு பாலத்தில் ரயில் செல்வதற்கான அனுமதி கிடைக்காது.
கப்பல் செல்லும் ஜெர்ஷா பாலத்துக்கு மட்டும் வலு கூட்டுவதற்கு புதிதாக 700 கிலோ எடையும், 10 மீட்டர் நீளமுள்ள 95 இரும்பு பிளேட்டுகள், 32 ஆயிரம் ரிவிட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
1914 பிப். 24இல், பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்தும், தனுஷ்கோடி தலைமன்னார் கப்பல் போக்குவரத்தும் தொடங்கப்பட்டன.
இதுவரை பாம்பன் பாலத்தை,
- 3 லட்சம் ரயில்கள் கடந்துள்ளன.
- 7 கோடி பயணிகள் பயணித்துள்ளனர்.
- 1 கோடி டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது.
- 35 ஆயிரம் நாட்கள் சேவையாற்றப்பட்டுள்ளது.
- 3 கோடி பயணிகள் 2 கி.மீ. பாம்பன் பயணத்தை ரசித்துள்ளனர்.
- 100 கோடி வருமானம் ரயில்வே ஈட்டியுள்ளது.