பாப்பாவுக்கு இஸ்லாம்: 'தானே உருவாகுமா?'


குழந்தைகளே!

காலையில் நாம் இட்லி சாப்பிடுகிறோம். இல்லையென்றால் தோசை சாப்பிடுகிறோம். 

இவைகளை அம்மா.. சுடச் சுட செய்து தருகிறார். 

இவை தானாகவே அடுப்பிலிருந்து தட்டுக்கு வந்து விடுமா? அப்படி யாராவது சொன்னால் நாம் நம்பதான் முடியுமா?
அதேபோல, அப்பா நமக்கு அழகழகான ஆடைகளை வாங்கி தருகிறார். 

அவற்றை நமது 'டைலர்' மாமா அளவெடுத்துத் தைக்கிறார். அளவோடு வெட்டி கச்சிதமாக தைத்துத் தருகிறார். 

"கத்திரிகோல் தானாகவே துணியை வெட்டுகிறது!"

"தையல் மெஷின் அந்த துணியை அதுவாகவே தைக்கிறது!"
"கடைசியில், ஆடைகளாக நம்மிடம் வருகிறது!"

- என்று யாராவது சொன்னால் நாம் நம்புவோமா? 

"போங்க மாமா..! டூப்.. விடாதீங்க..!" - என்றல்லவா சொல்வோம்! 

"டைலர் மாமா இல்லாமல் சட்டை, பேண்ட், பாவாடை இவையெல்லாம்  எப்படி தானாக வரும்?" - என்றல்லவா சிரிப்போம்.
பிள்ளைகளே!

இப்படியே யோசனை செய்து பாருங்கள்!
  • நாம் அமரும் இந்த நாற்காலி,
  • நாம் 'ஹோம் வொர்க்' செய்யும் இந்த மேசை,
  • நாம் கால் நீட்டிப் படுக்கும் இந்த சோபா,
  • முதுகு வலி என்று சொல்லி பாட்டி தரையில் விரித்துப் படுக்கும் பாய்..
  • அப்பாவும், அம்மாவும் குர்ஆனை ஓதும் 'ரேஹால்',
  • தாத்தா சாய்ந்து பேப்பர் படிக்கும் 'ஈஸி சேர்'
- இவைகளை எல்லாம் தச்சர் செய்கிறார் அல்லது அதற்கான சில பேர் வேலை செய்து தயாரிக்கிறார்கள். இவை தானாகவே உருவாவதில்லை.
அப்படியே இந்தச் சூரியன், நிலவு, வானம், பூமி, பறவை, விலங்குகள், செடி, கொடிகள், மனிதன் உட்பட தாமே உருவானவை அல்ல.

இவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஒரு நோக்கத்துக்காக படைக்கப்பட்டவை. இவற்றை உருவாக்கியவனைத்தான் நாம் 'அல்லாஹ்' என்கிறோம் அதாவது 'இறைவன்' என்று சொல்கிறோம்.
என்னை, உங்களை, அம்மாவை, அப்பாவை, அண்ணனை, அக்காவை, தம்பியை, சின்னப்பாப்பாவை.... இப்படி எல்லோரையும் படைத்தது இறைவன்தான்.

இந்த உலகில் எல்லோரையும், எல்லாவற்றையும் இறைவன்தான் படைத்தான். 

படைத்தது மட்டும் அல்லாமல் எல்லோருக்கும் உணவளிப்பவன் அவன்தான்.

அதுபோல, எல்லோரையும் பாதுகாப்பவனும் அவன்தான்.

எல்லோருக்கும் வாழ்வளிப்பது போலவே குறிப்பிட்ட நாளுக்கு பிறகு எல்லோருக்கும் மரணத்தை தருபவனும் அவன்தான்.

இறைவன்தான் நம் எல்லோருக்கும் அரசனாவான்.
இறைவன்தான் நம் எல்லோருக்கும் எஜமானனும் ஆவான்.

நாம் அனைவரும் இறைவனின் அடிமைகளாவோம். 

அதனால், நாம் இறைவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும். இறைவனின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப நம் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

Related

பாப்பாவுக்கு இஸ்லாம் 3754499436977737482

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress