நம்பிக்கையின் அடிப்படை
http://mazalaipiriyan.blogspot.com/2012/11/blog-post_15.html
முஸ்லிம்களின் நம்பிக்கையின் அடிப்படைகள் என்னென்ன?
இறைவன் ஒன்று என்று நம்புவது. சுற்றி உள்ள அனைத்தையும் படைத்துக் காத்து வருபவன் அவன்தான் என்று நம்புவது.
இறைவன் தனது படைப்புகள் அனைத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் வல்லமை உள்ளவன் என்று நம்புவது.
மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்று வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் நபிமார்கள் என்று நம்புவது.
நபிமார்களின் வரிசையில் கடைசியாக வந்தவர்கள் இறுதி நபி முஹம்மது (ஸல்) என்று நம்புவது.
இறைவனின் கட்டளைகள் அடங்கிய தொகுப்பு திருக்குர்ஆன். அது நபிகளார் மீது அருளப்பட்டது என்று நம்புவது.
இறைவனின் பணியாட்களான வானவர்களை நம்புவது.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய நல்ல செயல்களுக்காக நன்மையும் (சொர்க்கம்), கெட்ட செயல்களுக்காக தீமையும் (நரகம்) பெறவிருக்கிறான் என்று நம்புவது.
எல்லா செயல்களும் இறைவனின் நாட்டப்படியே (விதி) நடக்கின்றன என்று நம்புவது.
இந்த உலகம் அழிக்கப்பட்டு மீண்டும் மனிதர்கள் அனைவரும் உயிர்க்கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளை நம்புவது.
- எளிமையான நம்பிக்கை,
- நல்ல நம்பிக்கை இல்லையா?
- இறைவன் நாடினால்.. நாளொன்று கற்பது தொடரும்.