'சித்திரம் கூடாது! ஏன்?'
http://mazalaipiriyan.blogspot.com/2013/01/blog-post.html
இறைத்தூதர் முஹம்மது நபிகளைச் சித்திரம் தீட்டுவதையோ, சிலை செதுக்குவதையோ இஸ்லாம் அனுமதிப்பதில்லை. தடுக்கிறது. சித்திரமோ, சிலையோ இருந்தால்.. மரியாதை என்று தொடங்கி பிறகு, அவரை வழிபடும் நிலைக்கு ஆளாக்கிவிடும்.
"இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்!"- என்று உபதேசம் செய்த இப்ராஹீம் (ஆப்ரஹாம்), இஸ்மாயீல் (இஸ்மவேல்), ஈஸா (இயேசு கிருஸ்து) ஆகிய இறைத்தூதர்களைப் பின்பற்றியவர்கள் காலப்போக்கில் சித்திரமும், சிலையும் செய்து அவர்களை வணங்கத் தொடங்கிவிட்டனர்.
"இறைவன் இல்லை!"- என்று சொன்ன சமண தீர்த்தங்கரர்களையும், புத்தரையும்கூட பின்னால் பெரிய சிலைகள் செய்து வணங்கத் தொடங்கி விட்டனர்.
நேசத்தின் காரணமாக.. மரியாதை செலுத்தத் தொடங்கி.. அதுவே பின்னர் வழிபாடாக.. மாறியதால்தான் உலகத்தில் பல தெய்வ வணக்கம் பரவியது.
"இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது!"- என்பதில் மிக உறுதியானது இஸ்லாம். இதுவே, அதன் மூலக் கொள்கை ; அடிப்படை.
மற்ற இறைத்தூதர்களுக்கும், சமயச் சான்றோர்களுக்கும் நேர்ந்ததைப் போல, இறைத்தூதர் முஹம்மது (இறைவனின் கருணையும், அமைதியும் உண்டாவதாக!) அவர்களுக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்பதால்தான் அவருக்குச் சித்திரமோ, சிலையோ செய்வதை இஸ்லாம் தடுக்கிறது.