அறிவமுது: உயிர் காக்கும் சேவையில் ஆம்புலன்ஸ்
http://mazalaipiriyan.blogspot.com/2013/07/blog-post_1222.html
நெப்போலியன் படைப்பிரிவில் பணியாற்றிய தலைமை டாக்டர் 'டொமினிக் ஜின்லாரே'தான் ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். பிரெஞ்சு மொழியில், ‘ஹோபிடல் ஆம்புலன்ட்’ என்னும் வார்த்தைக்கு ‘நகரும் மருத்துவமனை’ என்பது பொருள்.
முதல் ஆம்புலன்ஸ் வண்டி 200 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.
ஆரம்பத்தில், குதிரை பூட்டிய வண்டியில் ஆம்புலன்ஸ் செயல்பட்டது.
இரயில்கள், கப்பல்கள், விமானங்கள் மூலமாக சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, பலர் இறக்க நேரிட்டது. இதனால் ஆம்புலன்ஸிலேயே உயிர்காக்கும் பொருட்களான ஆக்சிஜன், ஸ்ட்ரெச்சர், மருந்துகள் போன்றவை கிடைக்கும் வசதி செய்யப்பட்டது.
மோட்டார் வாகனங்களில் அமைக்கப்பட்ட உலகின் முதல் ஆம்புலன்ஸ் நியுயார்க் நகரில் உள்ள ‘பெவில்யூ’ மருத்துவமனையில் 1869 ஆம் ஆண்டில் மக்களுக்காக பயன்படுத்தப்பட்டது.
1970க்குப் பிறகு ஆம்புலன்ஸிற்காகவே பயிற்சி அளிக்கப்பட்ட டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் அமர்த்தப்பட்டனர்.
ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை ஆம்புலன்ஸிலேயே அளிக்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் வேன் பிரிட்டனில் உள்ளது.
59அடி நீளமுள்ள 44 படுக்கை வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அமெரிக்காவில் செயல்படுகிறது.