அறிவமுது: 'எக்ஸ் ரே'



நாம் கீழே வழுக்கி விழுந்துவிட்டாலோ அல்லது ஏதேனும் விபத்தில் அடிபட்டுவிட்டாலோ மருத்துவரிடம் செல்வோம்.

அப்போது, நம்மைப் பரிசோதிக்கும் மருத்துவர், எலும்புகளுக்கோ நரம்புகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய 'எக்ஸ் ரே' எடுத்து வரச் சொல்வார்.

நமது உடம்பின் உள்ளே ஊடுருவிச் செல்லும் கதிர்கள் அடிபட்ட தன்மையினைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

இன்றைய மருத்துவ உலகில் நோயின் தன்மையை அறியப் பெரிதும் பயன்படக் கூடது 'எக்ஸ் ரே' கதிரியக்க முறை.

புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் இக்கதிர்கள் பெரிதும் பயன்படுகின்றன.

மருத்துவ உலகிற்கு மட்டுமல்லாமல், உயர்ந்த ஆபரணங்களை மறைத்துவைத்துக் கடத்துவதையும் கண்டுபிடிப்பதற்கும், இயற்கை வைரத்தைச் செயற்கை வைரத்திலிருந்து பிரித்தெடுப்பதற்கும், பெரிய கட்டடங்கள், இரும்புப் பாலங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதைப் பார்த்துச் சரி செய்வதற்குமான பல செயல்களில் இக்கதிர்கள் பயன்படுகின்றன.

இந்த 'எக்ஸ் ரே' முறையினைக் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா? அவர்தான் 1845, மார்ச் 22 இல் ஜெர்மனியின் லௌனப் என்ற இடத்தில் பிறந்த 'வில்ஹம் ராண்ட்டேஜென்' என்பவராவார். இவரது தந்தை ஒரு விவசாயி

1885 இல் 'விர்ஸ்பொர்' பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த வில்ஹம், தனது ஆய்வுக்கூடத்தில் சில வாயுக்களை வைத்து சோதனை செய்யும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். வாயுக்களிலிருந்து வெளிப்படும் மின்சாரம்பற்றிய ஆராய்ச்சி அது.

வில்ஹம் ஒரு கேத்தோடு குழாயை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த அறை முழுவதும் இருட்டாக இருந்தது. கருப்புக் காகிதத்தால் கேத்தோடு குழாயையும் அவர் மூடி வைத்திருந்தார்.

அப்போது, அந்தக் குழாய்க்கு அருகிலிருந்த 'பிளாட்டிளா சையனைட்' படிகம் வெளிச்சம்பட்டு மின்னியது.

வில்ஹமுக்கு ஒரே ஆச்சரியம்.

குழாயிலிருந்து ஏதோ கதிர் ஒன்று வெளிப்பட்டு குழாயை மீறி, மூடி வைத்திருந்த கருப்புக் காகிதத்தையும் தாண்டி வந்திருக்க வேண்டும் என அவர் கணித்தார்.

கண்களுக்குப் புலப்படாதவையாக இருந்த இந்தக் கதிர்கள் அதுவரையிலும் கண்டுபிடிக்கப்படாததால் அவற்றுக்கு 'எக்ஸ் ரே' எனப் பெயர் சூட்டினார்.

எல்லா ஒளிக்கதிர்களும் போட்டோ தகடுகளில் படியும் தன்மை கொண்டுள்ளதால் இவர் கண்டுபிடித்த ' எக்ஸ் ரே' கதிர்களையும் தகடுகளில் பதியவைக்க ஆசைப்பட்டார். ' எனவே, இக்கதிர்களை போட்டோ தகட்டில் கை வைத்திருந்த மனைவி மீது செலுத்திப் பார்த்தார்.

அதன்பின் அந்தத் தகட்டிலுள்ள கருவியைப் பார்த்போது, அதில், அவரது மனைவியின் கை எலும்புகளும் அவர் அணிந்திருந்த மோதிரமும் பதிவாகியிருந்தன.

1895 இல் - தனது 50 ஆவது வயதில் இந்த அற்புதத்தை வில்ஹம்  நிகழ்த்தி காட்டினார்.

இவரது இந்தக் கண்டுபிடிப்புக்காக 1901 இல் உலகின் இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

'எக்ஸ் ரே' கதிர்கள் அடிக்கடி ஊடுருவினால் உடலுக்குப் பெரும் பாதிப்பு உண்டாகும்.  

'வில்ஹம் ராண்ட்டேஜென்' மற்றும் அவருடன் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பின்னாளில் 'எக்ஸ் ரே' கதிர்களின் பாதிப்பினாலேயே உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


Related

அறிவமுது 3739065857160136576

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress