விழிகள்: 'உலகின் மிகச் சிறந்த அழகு!'
http://mazalaipiriyan.blogspot.com/2013/09/blog-post_14.html
பிறரை கவராத உனது தோற்றம் உலகில்
ஓர் அழகான வடிவத்தையும், தன்னம்பிக்கை கலந்த
புத்தெழுச்சியையும், விட்டுச் செல்வதாக இருந்தால் பிறகென்ன உலகின் மிகச் சிறந்த 'பேரழகன்'
அல்லது 'பேரழகி' நீங்கள்தான் போங்கள்!
கற்பனையான வார்த்தைகள் அல்ல இவை.
இதற்கு உதாரணமாக இருப்பவர் இருபத்து மூன்று வயதான லிசி! உலகின் மிகவும்
அருவருப்பான பெண் என்று பெயர் வாங்கியவர்.
பிறக்கும்போதே உடலில் சுரக்கும் சுரப்பிகளின்
குறைவால் உடல் எடை குறைந்து ஒரு வினோத உருவத்தைப்
பெறும் நோய் தாக்குதலுக்கு ஆளானார். இத்தகைய நோய்
தாக்கியவர்கள் உலகிலேயே லிசி உட்பட இரண்டே இருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
யூடியூபில்
இவரது காணொளியைக் கண்டு ஒருவர் ‘பேய்!’ என்றும் மற்றொருவர் ‘தொலைந்து போ!’ என்றும்
விமர்சனம் செய்தார்கள்.
இப்படி சொல்லொண்ணாத மன வேதனைகளைப் பெற்ற லிசி இன்று உலகின்
முதல்தர தன்னம்பிக்கை தாரகை! சர்வதேச அளவில் போற்றப்படும் மிகச் சிறந்த பேச்சாளர்.
இருநூறுக்கும் மேற்பட்ட கருத்து பட்டறைகளைகளில் கலந்து கொண்டு உலக மக்களுக்கு வாழ்வியல்
நம்பிக்கையூட்டியவர்.
சமீபத்தில் லிசி ‘Be
Beautiful, Be You’ (சுய அழகோடு அழகாய் இருப்போம்!) என்ற ஒரு நூலையும் வெளியிட்டுள்ளார்.
லிசி, டெய்லி மெயிலுக்கு
அளித்த பேட்டியில்
சொன்னார்: "இறைவன் என்னை எப்படி படைத்தானோ அதை நான் எதன் பொருட்டும்
மாற்றிக் கொள்ளப்
போவதில்லை. முடிந்தவரை இயல்பாய் வாழவே
முயற்சிக்கிறேன். நான் என்பது
என் தோற்றத்தைப்
பொறுத்ததல்ல.
என் மீது ஏவப்படும்
எந்த தாக்குதலையும் , வசவையும் நான் பெரிது
படுத்திக் கொள்வதில்லை
, அவைகளை வெறும்
வார்த்தைகளாகவே பார்க்கிறேன். எல்லாவற்றையும்
கேட்டு புன்முறுவல் பூக்கிறேன்.
நான் என்னைக்
கிண்டலடிப்பவர்களின் அளவுக்குத் தரம்
தாழ்ந்து கீழிறங்கி
ஒருபோதும் செல்வதில்லை
. என் பதிலடியை
என் நம்பிக்கையின்
மூலமும், வெற்றியின்
மூலமும் மட்டும்
காட்ட விரும்புகிறேன்!"
இன்னுமென்ன? வெற்றியின் சிகரங்கள்.. அதோ தொடும் தொலைவில்! முன்னெடுத்து செல்லுங்கள் வாழ்க்கையை!
"நீங்கள் யாராக, எப்படி இருக்கிறீர்களோ, அதுதான்
உலகின் மிகச்
சிறந்த அழகு!"