விழிகள்: 'கொசுக்களை ஒழிக்கும் கருவி'


மனித உடலில் இருந்து வெளியேறும் வாசனையை, செயற்கையான ஒரு திரவம் மூலம் உருவாக்கி, கொசுக்களை கவர்ந்திழுத்து அழிக்கும் புதிய கருவியை, தனியார் பள்ளி மாணவியர் கண்டுபிடித்துள்ளனர். 

சென்னை, பெரம்பூர், கல்கி அரங்கநாதன் மான்ட்போர்டு மெட்ரிக் பள்ளியின் மாணவிகளின் சாதனை இது. இந்தப் பள்ளியின்  11-ஆம் வகுப்பு படிக்கும் ஒப்பிலியா, தேன்மொழி, அபிராமி ஆகியவர்கள்தான் அவர்கள். குறைந்த செலவில் கொசுக்களை ஒழிக்கும் சாதனம் இது. அந்த மாணவிகள் தங்கள் கண்டுபிடிப்பை பற்றி இப்படி சொல்கிறார்கள்: “மனிதர்களின் உடலிலிருந்து வெளியேறும் ஒருவகை திரவம் மற்றும் மூச்சுக் காற்றிலிருந்து வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றின் மூலமாக கொசுக்கள் மனிதர்களை அடையாளம் காணுகின்றன. இந்த அடிப்படைதான் புதிய கண்டுபிடிப்பான இக்கருவியின் தத்துவம்”

செவ்வக வடிவில் பெட்டி போன்று காணப்படும் இந்த கருவியில், இரண்டு பக்கங்களிலும் கம்பி வலைகள் உள்ளன. அந்த வலைகளில் 20 முதல் 40 வாட் வரை மின்சாரம் பாய்ச்சப்படும். பெட்டியின் கீழ்ப்பக்கத்தில் மூன்று திரவங்களை கொண்ட கண்ணாடி குடுவை பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு துளைகள் கொண்ட ரப்பர் அடைப்பான் மூலம் அந்த குடுவை அடைக்கப்பட்டுள்ளது. ஒரு துளை வழியாக காற்றை குடுவைக்குள் செலுத்தும் போது, திரவம், கம்பி வலை வழியாக வாயுவாக வெளியேறும். இந்த வாயு, மனித உடலில் சுரக்கும் வியர்வையின் வாசனையை வெளிப்படுத்தும். இதனால்  கவரப்படும் கொசுக்கள், கம்பி வலையை நோக்கி ஈர்க்கப்படுகின்றன.  மின் தாக்குதலுக்கு ஆளாகி அழிகின்றன.

கொசுக்களை ஒழிக்கும்  கருவியை தயாரிக்க, 1,750 ரூபாய் செலவாகும்.
திரவ கலவை 50 மி.லி., அளவு, 30 ரூபாய். 

இந்த கலவை இரண்டு மாதங்கள்வரை பயன்படுத்தலாம். கருவிக்கு ஐந்து ஆண்டுகள் வரை உத்தரவாதம் தரலாம். அதேபோல, இக்கருவியில் இரவு நேர மின்விளக்கும் பொருத்திக் கொள்ளலாம்.

தற்போது கடைகளில் விற்கப்படும் கொசு ஒழிப்பு மருந்துகள் மனிதர்களுக்கு நுரையீரல் பாதிப்பு உட்பட, பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கின்றன. இந்த திரவ கலவை அதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தாது. அதற்கு உரிய சான்றிதழும் பெறப்பட்டுள்ளது .

Related

விழிகள் 7102715153948377383

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress