அறிவமுது: 'வைரத்தின் கேரட் எதைக் குறிக்கிறது?'
http://mazalaipiriyan.blogspot.com/2013/09/blog-post_29.html
தங்கத்தில்
எந்த அளவுக்கு செம்பு, வெள்ளி மற்றும் கேட்மியம் சேர்க்கப்பட்டிருக்கிறன என்பதை ‘கேரட்’ அளவுகோள் குறிப்பிடுகிறது.
ஆனால், வைரம் முதலான நவரத்தினங்களில் கேரட்
அளவீடு அவற்றின் எடையைக் குறிப்பிடுகின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஒரு கேரட் என்பது இருநூறு
(200 மி) மில்லி கிராம் எடை அளவாகும். ஒரு ‘பாரகான்’
என்பது 100 கேரட் வைரம் அல்லது
முத்து போன்ற ஆபரணக் கற்களைக் குறிப்பதாகும். 100 கேரட்
என்றால் 20 கிராம் எடை அளவு என்று நீங்கள்
இப்போது கணக்குப் போட்டிருப்பீர்கள்.
கேரட் என்ற பெயர் கேரட்
வகை செடியிலிருந்துதான் எடுத்து கையாளப்பட்டது.
கேரட் செடிகள் கடுகு செடி
இனத்தைச் சேர்ந்தவை. இவற்றின்
விதைகள் ‘சிலிக்குவா’ வகையைச் சார்ந்தவை.
சிலிக்குவா
பூத்துக் காய்க்கும் போதே இரண்டாகப்
பிளந்து கொள்ளும் தன்மையுடையவை. அதன் பிளவுகளில் பத்துப் பதினைந்து
விதைகள் இருக்கும். ஒரு விதையின் எடை
தோராயமாக 200 மில்லி கிராம் எடை அளவு இருக்கும்.
பண்டைய நாட்களில்
எடை கற்களுக்கு பதிலாக செடிகளின் விதைகளையேப் பயன்படுத்தி வந்தார்கள். அந்த விதைகள் எப்போதும் மாறாத எடையைப் பெற்றிருக்கும்
என்றும் நம்பினார்கள். இக்கருத்து உண்மை அல்ல என்றாலும், அன்றைய
மக்களிடையே நிலவி வந்த நேர்மையும், நம்பிக்கையும்
எடையை சந்தேகிக்க இடம் தரவில்லை. அதேபோல, ஒரு செடியின் விதையையே எப்போதும் பயன்படுத்தியதால் நாளுக்கொரு எடை என்ற பிரச்சனையும்
அவர்களிடையே எழவில்லை.
நமது நாட்டில்
ஒருகாலத்தில் தங்கத்தை எடைபோட
'குன்றி மணி' செடியின் (கருப்பு - சிவப்பு நிறத்திலிருக்கும்) விதை
எடையாகப் பயன்படுத்தப்பட்டது.
1907 - ஆம், ஆண்டில்தான்
விதைகளை எடைக்கற்களாகப் பயன்படுத்துவதை தவிர்த்து உலோகங்களை எடையாகப் பயன்படுத்த
ஆரம்பித்தனர்.