நாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம்: 'அபூபக்கர்'
http://mazalaipiriyan.blogspot.com/2014/01/blog-post_1718.html
அபூபக்கர் அவர்கள் (இறையருள் பொழிவதாக!) இஸ்லாமிய பேரரசின் முதல் கலீஃபா அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி. நபிகளாரின் அன்புக்குரிய தோழர்.
நபிகளாரின் நபித்துவ திருச் செய்தியை முதன் முதலாக ஏற்றுக் கொண்டு 'உண்மைப்படுத்தியவர்'. இதனால், அபூபக்கர் சித்தீக் என்று சிறப்புப் பட்டத்தால் அழைக்கப்படுபவர்.
நபிகளார் மக்காவைத் துறந்து (ஹிஜ்ரத்) மதீனாவுக்கு செல்லும் போது, நிழலாய் உடன் இருந்தவர். அன்னை ஆயிஷா (இறையருள் பொழிவதாக!) அவர்களின் தந்தையார். நபிகளாரின் மாமானார்.