ஒரே கேள்வி? ஒரே பதில்! :' பூமியின் வரைப்படம் எப்படி தயாரிக்கப்படுகிறது?'
http://mazalaipiriyan.blogspot.com/2014/01/blog-post_6365.html
ஒரு வீட்டை அளப்பதற்கே அதற்கான 'டேப்பை' எடுத்துக் கொண்டு கூடவே ஒரு உதவியாளரை அழைத்துக் கொண்டு அளந்து கணக்கிட வேண்டியிருக்கிறது. ஆனால், இவ்வளவு பெரிய பூமியை அளந்து வரைப்படமாக்கி உள்ளார்களே? எப்படி?
பூமியின் மீது கற்பனை கோடுகளை வரைந்து பூமியின் வரைப்படம் தயாரிக்கப்படுகிறது. வரைப்படம் நமக்கு பல்வேறு இடங்களின் தகவல்கள் தெரிந்து கொள்ள உதவுகிறது.
இப்படி பூமியின் மீது கற்பனையாக வரையப்படும் கோடுகள், பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை, அட்ச ரேகை எனப்படுகின்றன. இவை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு போன்ற திசைகளை உறுதிப்படுத்திக் கொள்ள பயன்படுகின்றன. இந்த ரேகைகள் கோணத்தை அளக்கும் அலகான 'பாகை' என்னும் அளவீடுகளால் குறிக்கப்படுகின்றன.