ஒரே கேள்வி..? ஒரே பதில்..!: 'புதைபடிவங்கள்'
http://mazalaipiriyan.blogspot.com/2014/01/blog-post_18.html
'ஜுராசி பார்க்' திரைப்படத்தில் வரும் டைனோசர்களை நீங்கள் மறக்க முடியாமலிருப்பீர்கள். மலையைப் போல பெரிய பெரிய வடிவத்தில் அவை நடமாடும் காட்சிகள் பீதியைக் கிளப்பும்.
முன்னர் வாழ்ந்து சென்ற இத்தகைய உயிர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவுபவைதான் ஆங்கிலத்தில் 'பொஸைல்ஸ்' (Fossils) எனப்படும் புதைபடிவங்கள் அல்லது தொல்லுயிர் எச்சங்கள். தாதுப்பொருட்களால் நிரப்பப்பட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் கால்தடங்கள் ஆகியவற்றை குறிக்கும். இவை பாறையின் படிவங்களில் பெரும்பாலும் காணப்படுகின்றன.
நமக்கு முன்னர் வாழ்ந்து சென்ற உயிரிகளின் வாழ்வியல் உருமாற்றங்களை 'உயிரியலாளர்கள்' அறிந்துகொள்ள புதைபடிவங்கள் உதவுகின்றன.