அறிவமுது:'குடியரசு தினம்' என்பது என்ன?
http://mazalaipiriyan.blogspot.com/2014/01/blog-post_25.html
26 ஜனவரி 1950 இந்திய வரலாற்றின் மிக முக்கியமான நாள் எனலாம். இந்த நாளில்தான் இந்திய அரசியல் சட்டம் செயலுருவம் பெற்று அண்ணல் காந்தி மற்றும் அவரோடு தோளோடு, தோள் இணைந்த போராடிய எண்ணற்ற விடுதலைப் போராட்ட தியாகிகளின் விடுதலைக் கனவும் நனவானது.
இந்தியா 15 ஆக. 1947ல் விடுதலைப் பெற்றாலும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 26 ஜனவரி, 1950ல் தான் அமல்படுத்தப்பட்டது. 1947 லிருந்து 1950 வரையிலான காலகட்டத்தில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் நாட்டின் தலைவராக இருந்தார். சி.ராஜகோபாலாச்சாரியார் இந்திய கவர்னர் ஜெனராக இருந்து செயல்பட்டார். 26 ஜனவரி 1950ல் இந்தியாவின் ஜனாதிபதியாக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நாளின் முக்கியத்துவத்தை நினைவுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் புது தில்லி ராஷ்ட்ரபதி பவன் அருகிலுள்ள ராஷினி ஹில்லிருந்து, ராஜ்பத், இந்தியா கேட் மற்றும் வரலாற்றுப் புகழ் பெற்ற செங்கோட்டை வரையில் அணிவகுப்பு நடைபெறுகிறது. நாட்டு மக்களின் கலாச்சாரம், ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள், கப்பல்படை, விமானப்படையினரின் சாகஸங்கள் என்று இந்த ஊர்வலம் தொடர்கிறது. இறுதியாக இந்திய குடியரசு தலைவர் இந்த அணிவகுப்பினரின் மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.