ஒரே கேள்வி? ஒரே பதில்! :'காட்டுத் தீ என்பது என்ன?'
http://mazalaipiriyan.blogspot.com/2014/01/blog-post_28.html
காடு தீப்பற்றி எரிவதும், அதன் மேலே தாழ்வாக பறந்து ஹெலிகாப்டர் விமானங்கள் தீயை அணைக்க முயற்சிப்பதும் நாம் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம்!
'காட்டுத் தீ' என்பது என்ன?
'காட்டுத் தீயாய் செய்தி பரவியது!'- என்பார்கள் அதாவது வெகுவேகமாக செய்தி பரவுவதைக் குறிக்கும் சொற்றொடர் அது.
காடுகள் தீப்பற்றி, வெகுவேகமாக பரவும் தீயைத்தான் காட்டுத் தீ என்கிறார்கள்.
இயற்கையின் மிகப் பெரிய பேரழிவு இது.
காடுகள் தீப்பற்றி எரியும்போது, அதன் தீ நாலாபுறமும் வெகுவேகமாக பரவும். இதனால், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலாகிவிடும். இயற்கையின் அரிதான செடி-கொடிகள், வனவிலங்கள் மற்றும் உயிரினங்கள் ஆபத்தில் சிக்கிவிடும்.
இடி - மின்னல், மனிதர்களின் அலட்சியம், எரிமலையின் லாவாக் குழம்பு, வெப்பமான காற்று, வரட்சி இவை காட்டுத் தீக்கான முக்கிய காரணங்களாகும்.