அறிவமுது:'வெள்ளைச் சர்க்கரையா..? நச்சுப் பொருளா?'


இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? 

காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் அருந்தும் பால் வரை சீனி எனப்படும் சர்க்கரையைப் பயன்படுத்தாதவர் யாருமே இருக்க முடியாது. சில சமயங்களில் இதை அப்படியே அள்ளியும் சாப்பிடுவதும் உண்டு. 

இந்த வெள்ளைச் சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நாம் தெரிந்து கொண்டால்… அதைத் தொடக்கூட மாட்டோம்.  அதிலும் குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பார்த்தால் இந்த எண்ணம் இன்னும் உறுதிப்படவே செய்யும். 

கரும்பிலிருந்து பிழியப்படும் சாற்றில்,  பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் இரசாயனப் பொருளை கலந்து திரவநிலை பாக்டீரியா கட்டுப்படுத்தும் பொருளாக பயன்படுத்துகிறார்கள்.

பிழியப்பட்ட கரும்புச் சாற்றில், ஒரு லிட்டருக்கு 200 மில்லி லிட்டர் பாஸ்போரிக் அமிலம் கலக்கப்பட்டு, 60 சென்டி கிரேட் முதல் 70 சென்டி கிரெட் சூடு படுத்தப்படுகிறது.  இங்கு அமிலம் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது. 

இதன் பிறகு, இந்தக் கலவையில் சுண்ணாம்பை 0.2 விழுக்காடு என்ற அளவில் கலந்து இதில் சல்பர்-டை-ஆக்சைடு என்னும் வாயுவை செலுத்துகிறார்கள். 

அடுத்து, ‘பாலி எலக்ட்ரோலைட்டை’  சேர்த்து, தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களைத் தனித்தனியாகப் பிரித்து தெளிந்த சாறு எடுக்கப்படுகிறது. 


இதன் பிறகு, சுடுகலனில்காஸ்டிக் சோடா’,’ வாஷிங் சோடா’ சேர்த்து அடர்த்தி மிகுந்த திரவமாக மாற்றப்படுகிறது. 

மறுபடியும்சல்பர் டை ஆக்சைடு’ம், ‘சோடியம் ஹைட்ரோ சல்பேட்டு’ம் சேர்த்து அந்த கட்டி திரவம், படிகநிலைக்கு மாற்றப்பட்டு சீனியாக்கப்படுகிறது. 

சல்பர் டை ஆக்சைடு நச்சுத் தன்மைக் கொண்டது. இதுவும் சீனியில் கலந்து விடுகிறது. 

இப்படித்தான் சீனி எனப்படும் சர்க்கரை தயாரிக்கப்படுகிறது.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான நாள் சீனியைப் பயன்படுத்தக் கூடாது.  காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசயானம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாகி விடும். 

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு, எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போகவில்லையா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள்.  நிச்சயமாக அழுக்குப் போயே போய்விடும்.

இப்படிப்பட்ட ரசாயனப் பொருள் மிகுந்த ஒன்றைதான் நாம் நாள்தோறும் பயன்படுத்தி வருகிறோம். 

வெள்ளைச் சீனி பல்வேறு உடல் நோய்களுக்கு காரணமாக இருப்பதால் இதை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை இவற்றைப் பயன்படுத்த பழக்கிக் கொள்ள வேண்டும்.

Related

அறிவமுது 3138301165869751449

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress