அறிவமுது: 'எத்தனை எத்தனைக் காற்றுகள்!'
http://mazalaipiriyan.blogspot.com/2014/01/blog-post_9.html
கடும் கோடையில், ஜில்லென்று காற்று வீசினால் அந்தக் குளிர்ந்த காற்றை மகிழ்ந்து வரவேற்கிறோம். ஆனால், உண்மையில் காற்றுக்கு பல பெயர்கள் உண்டு என்பது தெரியுமா?
ஆமாம், தெற்கிலிருந்து வீசினால் அது 'தென்றல்
காற்று' எனப்படுகிறது. வடக்கிலிருந்து வீசினால் அது 'வாடைக்
காற்று'. அதேபோல, கிழக்கிலிருந்து வீசினால், அது 'கொண்டல்
காற்று' என்றும், மேற்கிலிருந்து வீசும்போது, அது 'மேலைக்
காற்று' என்றும் அழைக்கப்படுகிறது.
அதுபோலவே, காற்று வீசும்
வேகம் பொருத்து
இந்த பெயர்கள் மாறுகின்றன. இப்படி:
- 6 கி.மீ வேகத்தில் வீசுவது ‘மெல்லியக்காற்று’ எனப்படுகிறது.
- 6-11 கி.மீ வேகத்தில் வீசினால் அது ‘இளந்தென்றலாகி விடுகிறது.’
- 12-19 கி.மீ வேகத்தில் வீசுவது ‘தென்றல்’ என்றும்,
- 20-29 கி.மீ வேகத்தில் வீசுவது ‘புழுதிக்காற்று’ என்றும்
- 30-39 கி.மீ வேகத்தில் வீசினால், அது ‘ஆடிக்காற்று’ என்றும்
- 100கி.மீ வேகத்தில் வீசுவது ‘கடுங்காற்று’ என்றும்
- 101 -120 கி.மீ வேகத்தில் வீசுவது ‘புயற்காற்று’ என்றும்
- 120 கி.மீ மேல் வேகமாக வீசினால், அது ‘சூறாவளி’ என்றும் அழைக்கப்படுகின்றன.