நாளொன்று கற்போம்: சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம்: 'நகரா'



ஒலிபெருக்கி என்னும் அறிவியல் வளர்ச்சியற்ற அந்த நாட்களில் தமிழகத்தில் தொழுகைக்கு மக்களை எப்படி அழைத்தார்கள் தெரியுமா? 'நகரா' என்ற கருவியை ஒலித்து சப்தம் எழுப்பிதான் மக்களை தொழுகைக்காக அழைத்தார்கள். 

அந்நாட்களில் தொழுகைக்கு அழைத்த ஒலிக்கருவிகளில் இதுவும் ஒன்று.

மோதினார் என்னதான் சத்தமிட்டு வாய் வழியாக பாங்கு சொன்னாலும் அது இரண்டு மூன்று வீடுகளுக்குக் கூட கேட்காது. அப்போது பெரும்பாலான வீடுகளில் கடிகார வசதியும் இல்லை. பள்ளிவாசலில் ஒலிக்கும் இந்த நகரா சத்தம்தான் அவர்களுக்கு அலாரம் போல. இதை வைத்துதான் எல்லா மக்களும் நேரத்தை எளிதில் அறிந்து கொண்டார்கள். தங்கள் அன்றாட பணிகளைத் தொடங்கினார்கள். சில ஊர்களில் அதிகாலையில் தூக்கத்திலிருந்து எழுப்பும் 'சைரன்' ஒலியாகக்கூட இந்த நகரா இருந்துள்ளது.

'டம்..! டம்..!!' - என்று நின்று நிதானமாக லயத்தோடு ஒலிக்கும் இந்த நகராவின் சப்தத்தை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

அறிவியல் வசதிகள் வந்த பிறகு பெரும்பாலான தமிழக பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகள் வழியாக பாங்கு சொல்ல ஆரம்பித்தார்கள்.

நீங்கள் ஏதாவது பழைய பள்ளிகளுக்குத் தொழச் சென்றால் மறக்காமல் அங்கிருப்பவர்களிடம் 'நகராவைக்' காட்டச் சொல்லுங்கள்.  இன்றும்கூட இந்த 'நகரா'க்களை பல பள்ளிவாசல்களில் பாதுகாத்து வைத்திருக்கின்றனர்.


Related

நாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் 1526649768913808751

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress