அறிவமுது:'அதிசயங்கள் நிறைந்தது மனித உடல்'


மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவனுடைய உயரம் 8 மில்லி மீட்டர்  அதிகரிக்கும். தூங்கி எழுந்ததும் மீண்டும் பழைய உயரமே ஆகிவிடும். மனிதன் நிற்கும்போதும், உட்காரும்போதும் புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமே இதற்கு காரணமாகும்.

நமது உடல் எடையில் 14 விழுக்காடு எலும்புகளும், 7 விழுக்காடு ரத்தமும் உள்ளன.

நுரையீரலில் 300,00 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டால் அது பிரமிம்பூட்டும் 2400 கிலோமீட்டர் நீளமாக இருக்கும்.

ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிப்பான்களைக் (Filters) கொண்டது. அவை ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறன. ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகின்றன.

மனிதனின் ஒவ்வொரு ரத்த அணுவும் உடல் முழுவதையும் சுற்றிவர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கின்றன.

மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும், மிகச்சிறிய செல் ஆணின் விந்தணுவாகும்.

நமது உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம் சுமார் 6,00,000 மைல்களாகும் அதாவது பூமியை இரண்டு முறை வலம் வந்துவிடும் நீளம் இது.

கண்களின் தசையானது ஒருநாளில் 1,00,000 முறை அசைகிறது. இதற்கு சமமான வேலையை கால்களுக்கு கொடுக்க வேண்டுமென்றால் தினமும் 80 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும்.

மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் இயங்க வேண்டும்.

காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டது. ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளை கொண்டிருக்கும்.

அளந்து பார்த்துக் கொள்ளுங்கள்; கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாக இருக்கும்.

மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் பாக்டீரியாக்கள் இருக்கும்.

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம். கண்கள் 500 வகையான ஒளிகளை பிரித்தறியும் சக்தி கொண்டவை.

மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன, 35 வயது அடைந்ததும் நாள்தோறும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்சிஜனில் 20 விழுக்காடு மூளை பயன்படுத்திக் கொள்கிறது.

நமது மூளை 80 விழுக்காடு நீரால் ஆனது, மூளையின் செயல்திறன் பகலை விட இரவில் அதிகமாக இருக்கும்.

மனிதன் உயிரிழந்த பின்பு ஒவ்வொரு உறுப்பும் செயல் இழக்கும் நேரங்களில் வேறுபாடு உண்டு.

கண்கள்- 31 நிமிடம், மூளை- 10 நிமிடம், கால்கள்- 4 மணி நேரம், தசைகள்- 5 நாட்கள், இதயம்- சில நிமிடங்களிலேயே செயலிழந்து விடுகிறது.

Related

அறிவமுது 818551153025773859

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress