‘உங்கள் குழந்தைகள் குறித்து நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?
http://mazalaipiriyan.blogspot.com/2014/05/blog-post_29.html
ஏன் சிந்திக்காமலில்லை..? அவர்கள்தான் எங்கள் கனவுகளின் நாயகர்கள்!” என்பதுதான் உங்களது பதிலாக இருக்கும்
நல்லது. உண்மைதான்!
நமது உயிர் மூச்சே நமது சந்ததிகள்தான்.
அதனால், அவர்களின் அத்தனை தேவைகளையும் நாம் நிறைவேற்ற எல்லா
அர்ப்பணங்களையும் செய்யத் தயங்குவதுமில்லை.
இதுவும் நிஜம்தான்! மறுப்பதற்கில்லை.
ஆனால், இன்னும் பத்தாண்டுகளில் அவர்கள் சந்திக்க இருக்கும் நெருக்கடிகள் குறித்து என்றைக்காவது சிந்தித்திருக்கிறீர்களா?
பொறியாளர் கனவுகள், மருத்துவர் கனவுகள் இருக்கட்டும். இவற்றை நிறைவேற்றிக் கொள்ள இந்த பூ உலகம் உயிர்ப்புடன் வேண்டுமே?
குடிநீரை தோளில் சுமக்க ஆரம்பித்துவிட்ட
குழந்தைகள் இன்னும் சில ஆண்டுகளில் சுவாசிக்க ‘நல்ல’ காற்றையும் தோளில்
‘சுமைக்கலன்களில்’ சுமந்து செல்ல வேண்டியிருக்கும் என்பதைக் குறித்து
என்றைக்காவது சிந்தித்திருக்கிறீர்களா?
ஆசை, பேராசையாக உருவெடுத்து அது சக மனிதர்களைத் திண்ணும் ஆள்கொல்லியாகி… மாறி வரும் உலகமிது.
அன்பும், கருணையும், சக படைப்புகளிடம் இரக்கமுமாய் திகழ வேண்டிய வாழ்க்கை இறுகிவரும் நிலையில்..
நமது எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையை அவர்களாகவே மீட்டெடுக்கும் முயற்சி இது.
ஏறக்குறைய ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னரே உங்கள் குழந்தைகள் குறித்த கவலை எங்களையும் பற்றிப் பிடித்துக் கொண்டது.
இந்த இளம் பயிர்களை நல்லதொரு நாற்றங்காலில் நட்டெடுக்க வேண்டும் என்ற கவலையின் தேடலாய் உருவானதே ‘மழலைப்பிரியன் டாட் காம்.’
குழந்தைகளுக்கான அத்தனை நிஜங்களையும், அவர்களின் வாழ்வியலோடு, காலத்தோடு, வாழும் உலகத்தோடு பொருத்தப் பார்க்கும் ஒரு முயற்சி.
நல்ல பண்பாளர்களாய், இரக்கமுள்ளவர்களாய்,
தங்கள் எதிர்காலத்தை தாங்களாகவே மீட்டெடுக்கும் மீட்பர்களாய், உலகை தங்கள்
அன்பாலும், பண்பாலும், அறிவாலும் வென்றெடுப்பவர்களாய், மனித இனத்தை
ஒருங்கிணைப்பவர்களாய் ஆக்க வேண்டும் என்பதன் முயற்சியின் விளைவாக
உருவெடுத்ததே ‘மழலைப்பிரியன் டாட் காம்’
நிறைய குறைகள் இருக்கலாம். சுட்டுங்கள். நெறிப்படுத்தலாம்.
இந்த ‘உலகப் பிரயத்தனத்திற்கு’ உங்கள் ஒத்துழைப்பு என்றும் வேண்டும்.
- ‘மழலைப்பிரியன்’