ரியாஸ் எழுத்தாளனாகின்றான் - பகுதி 4, தனக்கு விரும்புவதையே பிறர்க்கும் விரும்பு!



ரியாஸ் சன்னலருகே அமர்ந்திருந்தான்.

அங்கிருந்து பார்த்தால்..  தெருவில் வருவோர் போவோர் தெளிவாகத் தெரிந்தனர். அவன் வீட்டுக்கு நேர் எதிரே ரவியின் வீடு.

ரவி வீட்டிலிருந்து வெளியே வந்தான். வாசலருகே நின்றான். அவனது கையில் ஆப்பிள். மறு கையில் பிரம்பு!

சிறிது நேரம் சென்றது. சிறுவன் ஒருவன் அந்த வழியே வந்தான்.

ரவி அவனை அருகில் அழைத்தான். "இதோ! ஆப்பிள் வாங்கிக் கொள்!" - என்றான். 

 சிறுவன் ஆசையாகப் பழத்தை வாங்க கையை நீட்டினான். நீட்டிய கையில் ரவி பிரம்பால் ஓங்கி அடித்தான். 

பாவம்! சிறுவன் துடித்துப் போனான். வலி தாளாமல் அழுது கொண்டே சென்றான். இதைக் கண்டு ரவி விழுந்து விழுந்து சிரித்தான்.

இப்படியே சில சிறுவர்களை ரவி துன்புறுத்தி இன்பம் கண்டான். 

ரியாஸீக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ரவியின் மேல் கோபம் கோபமாக வந்தது. 

அதற்குள் தெருவழியே ஒரு மனிதர் வந்தார். அவருடைய கையிலும் ஒரு பிரம்பு இருந்தது. அதை அவர் பின்புறமாய் மறைத்து வைத்திருந்தார். ரவியிடம் சென்ற அவர், சற்றே குனிந்து எழுந்தார். "தம்பி! இது உன்னுடைய காசா பார்!" - என்றார்.


"ஆமாம்!" - என்று சொல்வது போல ரவி தலையை ஆட்டினான். காசை வாங்க கையை நீட்டினான். 

நீட்டிய கையில் அந்த மனிதர் பிரம்பால் ஓங்கி அடித்தார். 

ரவி வலி பொறுக்க முடியாமல் தவித்தான். அவனது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

"தம்பி! இப்படிதானே மற்றவர்களுக்கும் வலிக்கும்?" - என்று சொல்லியவாறு அவர் சென்றுவிட்டார்.
பார்த்த சம்பவத்தை ரியாஸ் அப்படியே எழுதினான். எழுதியதைக் கொண்டு போய் மாமாவிடம் காட்டினான். 

ரியாஸ் எழுதியதை மாமா படித்துப் பார்த்தார். 

"நன்றாக இருக்கிறது ரியாஸ்!"-  என்று முதுகில் தட்டிக் கொடுத்தார்.

"இதில் ஒரே ஒரு விஷயத்தைச் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்!" - என்று ஆலோசனை கூறினார்.

"அது என்ன மாமா?"

"தனக்கு விரும்புவதையே பிறர்க்கும் விரும்பு!" - என்ற தலைப்பு இதற்கு பொருத்தமாக இருக்கும்!

மாமா சொன்ன ஆலோசனையைக் கேட்டதும் ரியாஸீக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எழுதிய சம்பவத்திற்கு தலைப்பு வைத்தான்: 'தனக்கு விரும்புவதையே பிறர்க்கும் விரும்பு!'

"சூப்பர் தலைப்பா?  நீங்களும் எழுதிபாருங்களேன்!"



- தொடரும்.

Related

சிறுவர் தொடர் 4585834644892092299

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress