சாந்திவனத்து கதைகள்: 'எத்தனை காடுகள்?'



சாந்திவனத்தில் ஒரு சிங்கம் வசித்து வந்தது. 

அதற்கு வயதாகிக் கொண்டே வந்ததால்... தனது பிள்ளைகளுக்கு வாழ்க்கை சம்பந்தமாக சில உண்மைகளைக் கற்றுக் கொடுக்க எண்ணியது. 

அதில் முக்கியமானது, "உணர்ச்சிவசப்பட்டு உடனுக்குடன் எந்த முடிவும் எடுக்கக்கூடாது!" - என்ற பாடம்.

ஒருநாள் சிங்கம் தனது நான்கு குட்டிகளையும் அருகில் அழைத்தது.

"குழந்தைகளே, நமது சாந்திவனத்துக்கு ரொம்பவும் தொலைவில் மற்றொரு காடு இருக்கிறது. அங்கு போவதற்கு பல மாதங்கள் ஆகும். 

அந்த காட்டுக்கு நீங்கள் சென்று காடு எப்படி இருக்கறிது? அங்கு உள்ள நிலவரம் என்ன? என்பதை எல்லாம் அறிந்து வரவேண்டும். ஜாக்கிரத்தையாக சென்று வாருங்கள்!" - என்று கூறி அனுப்பி வைத்தது.

சாந்திவனத்திலிருந்து நான்கு சிங்கக் குட்டிகளும் புறப்பட்டன. கரடு முரடான பாதை.. மலைச் சிகரங்கள்... சமவெளிகள் ... என்று பாதை நீண்டது.

 உண்மையில் சிங்கம் சொன்ன காடு ரொம்ப.  ரொம்ப தொலைவில்தான் இருந்தது.

வழியில் சிங்கக் குட்டிகள் நான்கும் தனித்தனியாகப் பிரிந்து விட்டன.

ஒருவழியாக நான்கு குட்டிகளும் புதிய காட்டைப் பார்த்துவிட்டு சாந்திவனத்துக்கு திரும்பி வந்தன.

சிங்கம் குட்டிகளை அழைத்து நடந்ததை விசாரித்தது. 

முதல் குட்டி, "நான் சென்று வந்த காடு முழுக்க பனிப்போர்வை படர்ந்திருந்தது. குளிர் தாங்க முடியவில்லை. அந்த குளிருக்கு அங்கு எந்த உயிரும் வாழ வாய்ப்பில்லை! நான் உயிர் பிழைத்துத் திரும்பியதே பெரிய விஷயம்!" - என்றது.

அடுத்த குட்டி, "அந்தக் காடு பச்சைப் பசேல் என்று செழித்து வளர்ந்திருந்தது. கண்ணைப் பறிக்கும் பூக்கள் பூத்து காடு முழுவதும் தோரணம் கட்டியிருந்தன. 
அங்கேயே தங்கிவிடலாம் என்று தோன்றியது. நீ என்னடாவென்றால் என்னவோ சொல்கிறாயே!" - என்றது முதல் குட்டியைப் பார்த்தவாறு.

மூன்றாவது குட்டி, "சுட்டுப் பொசுக்கிடும் அளவுக்கு வெய்யில் தகித்த காட்டில் நான் வறுப்பட்டுப் போனேன். எங்கும் அனல் காற்றுதான் வீசியது. இனிமேல் அங்கிருந்தால் பொசிங்கிவிடுவேனோ என்று பயந்து ஓடிவந்துவிட்டேன்!" - என்றது.

நான்காவது குட்டி அதன் பங்குக்கு சொல்ல ஆரம்பித்தது: "ஆரம்பத்தில் எங்கும் மொட்டை மரங்களாக காட்சியளித்தன. பிறகு திடீரென்று எல்லா மரங்களும் பூவும், பிஞ்சுமாய் பூத்துக் குலங்கின".

எல்லாவற்றையும் கேட்ட சிங்கம் தன் குட்டிகளின் முதுகில் தட்டிக் கொடுத்தது. எல்லா குட்டிகளையும் பாராட்டியது.

"நாங்கள் தனித்தனி காடுகளுக்குப் பிரிந்து போய்விட்டோமோ!" - என்றன நான்கு குட்டிகளும்.

சிங்கம் சொன்னது: "இல்லை பிள்ளைகளே! நீங்கள் நால்வர் பார்த்ததும் ஒரே காடுதான். வழியில் நீங்கள் பிரிந்து போனதால்.. ஓர் ஆண்டின் நான்கு பருவங்களையும் அந்த காட்டில் பார்த்தீர்கள். அதாவது ஒரே காட்டில் குளிர்காலம், வசந்தகாலம், கோடைகாலம், இலையுதிர் காலம் என்று பார்த்தீர்கள்"

"அப்படியா?" - குட்டிகள் நான்கும் வியப்புடன் வாய்ப்பிளந்தன.

"ஆம் பிள்ளைகளே! மரமானாலும், மனிதனானாலும் ஒரு சம்பவத்தை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. பிரச்சினையின் எல்லா பக்கங்களையும், கோணங்களையும் ஆராய்ந்து பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சினைக்கு சரியான தீர்வு கிடைக்கும்!"- என்று சிங்கம் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தியது.

சிங்கக் குட்டிகள் அந்த அறிவுரையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தன. 

சிங்கத்தைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தன.



Related

சாந்திவனத்து கதைகள் 5403617523148341290

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress