வரலாற்றை மாற்றிய அந்த கண நிமிடம்!

 
நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்?  
'நீல்ஆம்ஸ்ட்ராங்' என்று எல்லோருக்கும் தெரிந்த உண்மை. 
ஆனால்.. நிலவில் முதன் முதலில் கால் வைததிருக்க வேண்டியவர் யார் தெரியுமா?
ரொம்பவும் புருவங்களைச் சுருக்க வேண்டாம்! பதில் இதுதான்:
நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர்.. 'எட்வின் சி ஆல்ட்ரின்'
அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் 'பைலட்' அதாவது விமானி.
ஆல்ட்ரின் அமெரிக்காவின்  விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் விமானியாக நியமிக்கப்பட்டார்.
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 'கோ-பைலட்' அதாவது இணை விமானி.
 
அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து, "பைலட் பர்ஸ்ட்!"- என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். அது இடது காலை எடுத்து வைப்பதா? அல்லது வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல.  
 
நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்க இருக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடமிது. கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்றும் தெரியாது. ஒருவேளை    'புதை மணலாக' இருந்து உள்ளே இழுத்துவிட்டால் அல்லது 'எரி மணலாக' இருந்து காலை சுட்டுவிட்டால் தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார். அவர் தயங்கிய அந்த கண நேரத்தில்.. 
 
நாசாவிலிருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. "...கோ பைலட் நெக்ஸ்ட்!"
 
நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி விண்கலத்திலிருந்து இறங்க ஆரம்பித்தார். கால ஏட்டுக்குள் தடம் பதித்தார்.
 
ஆம்.. உலக வரலாறு அந்த ஒரு நொடி தயக்கத்தால்.. மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும் கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.
 

 
 
முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல, தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.
 
இனி நிலவை பார்க்கும் போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
 
நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான்!
 
ஆனால், அந்த ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்து விடும்! எச்சரிக்கை!!
 
தயக்கம். பயம், கூச்சம் இந்த முதல் எதிரிகளை வீழ்த்திவிடுங்கள்! வெற்றி நமதே!

Related

அறிவமுது 7287364619963698576

Post a Comment

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress