இஸ்லாமிய காலண்டர்

தற்போது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் காலண்டர் 'கிரிகோரியன்' காலண்டராகும். இது 'சோலார் சிஸ்டம்' எனப்படும் சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது.  364 மற்றும் 1/4 நாட்களைக் கொண்டது.

 ஆனால், முஸ்லிம்களின் ஆண்டு கணக்கு 'லூனார் சிஸ்டம்' எனப்படும் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது. 

ஒரு சந்திர ஆண்டு என்பது சந்திரனின் 12 முழுமையான சுழற்சிகளைக் கொண்டதாகும். சந்திர ஆண்டு 354 மற்றும் 11/30  நாட்களும் கொண்டது.

முஸ்லிம்களின் ஒவ்வொரு புத்தாண்டும் கிரிகோரியன் காலண்டரைவிட 10-11 நாட்களுக்கு முன்பாகவே தொடங்கிவிடும்.


இஸ்லாமிய காலண்டரின் 12 மாதங்கள்:

1. முஹர்ரம்
2. சபர்
3. ரபிஉல் அவ்வல்
4. ரபிஉல் தானி
5. ஜமாஅத்துல் ஊலா    
6. ஜமாஅத்துல் ஆகிரா
7. ரஜப்
8. ஷபான்
9. ரமளான்
10. ஷவ்வால்
11. துல்கதா        
12. துல்  ஹஜ்.


நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்கு நாடு துறந்து  ஹிஜ்ரத் செய்த நாளிலிருந்து (ஜீலை 26, 622) இஸ்லாமிய ஆண்டு கணக்கு துவங்கியது. ஒவ்வொரு ஆண்டின் துவக்கமும்  ஹிஜ்ரி என்று ஆரம்பமாகி கணக்கிடப்படுகிறது.  இதை ஆங்கிலத்தில் சுறுக்கக் குறியீடாக AH என்கிறார்கள்.


இஸ்லாமிய ஆண்டை(AH) ஆங்கில ஆண்டான கிரிகோரியன் ஆண்டோடு (AD) பொருத்திப் பார்க்க கீழ்க்கண்ட கணக்கீட்டை பயன்படுத்தலாம்!

AD = 622 + (32/33 * AH)

AH = 33/32 * (AD - 622) 

Related

நாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் 8709673918964774062

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress