''நறுமணத் திரவியம்'
http://mazalaipiriyan.blogspot.com/2012/12/blog-post_23.html
நபிகளாருக்குப் பிடித்தமானவற்றில் நறுமணம் பூசிக்கொள்வதும் ஒன்று.
"தூய்மை இறைநம்பிக்கையின் சரிபாதி!"- என்கிறார்கள் நபிகளார்.
"கூழானாலும் குளித்துக்குடி! கந்தையானாலும் கசக்கிக் கட்டு!"- என்ற மூதுரைக்கு ஏற்ப அகத்தூய்மையைப் போலவே புறத்தூய்மையையும் வலியுறுத்துகிறது இஸ்லாம்.
வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்ற நாற்றமெடுக்கும் பொருட்களைத் தின்றுவிட்டு பள்ளிவாசலுக்கு வருவதையும், இஸ்லாம் விரும்புவதில்லை.
தொழுகைக்கு முன், முகம், கை, கால்களைக் கழுவிக் கொண்டு, தூய்மையாகச் செல்ல வேண்டும் என்பது கட்டாயம்.
தூய்மையை அடிப்படையாகக் கொண்ட நபிவழியே 'அக்தர்' என்னும் நறுமணம் பூசிக் கொள்வதும்!