'786' என்பது என்ன?
http://mazalaipiriyan.blogspot.com/2012/12/786.html
அரபி அட்சரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பு எண் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' - என்ற அரபி சொற்றொடரின் (அளவிலாக் கருணையும், இணையிலாக் கிருபையும் உடைய இறைவனின் திருப் பெயரால்..) கூட்டுத் தொகையே 786.
திருக்குர்ஆனின் வார்த்தையான 'பிஸ்மில்லாஹ்...' எழுதப்படும் தாள்கள் காலில் மிதிப்படுவதைத் தவிர்க்கவே 786 பயன்படுத்தப்படுகிறது.
இது சரியான முறையல்ல.
சிறைக் கைதிகள்கூட அடையாள எண் இட்டு அழைப்பதை விரும்பாத போது, இறைவனை அவனது திருப் பெயரால்.. அதுவும் 'ரஹ்மான்-கருணையாளன்', 'ரஹீம்-கிருபையாளன்' என்று பண்புகளைச் சுட்டும் அரபி வார்த்தைகளில் அழைப்பதுதான் சிறந்தது.