'மனிதர்களாக வாழ்வோம்!'



இரவு நேரத்தில் கொஞ்சம் வெட்டவெளியிலோ, மொட்டை மாடியிலோ நின்று உங்கள் தலைக்கு மேல் உள்ள வானத்தைக் கவனித்துப் பாருங்களேன்!

திட்டுத் திட்டடாய் நகர்ந்து செல்லும் மேகங்கள். கண் சிமிட்டி உங்களை விளையாடக் கூப்பிடும் நட்சத்திரங்கள். மேகத்துக்குள் ஓடி ஒளிந்து கண்ணாமூச்சி காட்டும் வட்ட நிலா. ஜில்லென்று வீசும் காற்று. தலையாட்டி .. தலையாட்டி நடனமாடும் மரங்கள் என்று ஒரே சந்தோஷமும், கும்மாளமுமாய் இருப்பதைக் காணலாம்.

பகலிலோ.. கிழக்கில் சிவப்பு நிறத்தில் உதிக்கும் சூரியன். பச்சைக் கம்பளம் போர்த்தப்பட்டது போன்ற பூமி. வண்ண வண்ணமாய்ப் பூத்துக் குலுங்கும் தாவரங்கள் என்று இயற்கையின் இன்னொரு சந்தோஷ முகத்தைக் காணலாம்.



இந்த உலகத்தில் நாம் பார்க்கும் எல்லா படைப்புகளுமே மனிதர்களாகிய நமக்காகத்தான் படைக்கப்பட்டுள்ளன. 

அன்பான அப்பா-அம்மா, பிரியத்துக்குரிய அண்ணன்-தங்கை, உற்றார்-உறவுகள் என்று எல்லோருமே ஆதி தாய்-தந்தையிலிருந்து உருவானவர்கள். உலகம் முழுக்கப் பரவி இருக்கும் மனிதர்கள் எல்லாம் ரத்த உறவுமுறை கொண்ட சகோதரர்கள். 

மனிதர்கள் சந்தோஷமாகவும், அமைதியோடும் வாழ வேண்டும். இதற்கான வழிகாட்டியாக இருப்பவைதான் மதங்கள். அதுவும் நாம் பிறந்திருக்கும் இந்த பூமி உலகத்திலேயே மிகச் சிறந்த பூமி. அன்பாலான நல்லதொரு வாழ்க்கையை வேர்களாக கொண்ட பூமி. உலகத்துக்கே ஒழுக்கத்தைப் போதிக்கும் தகுதியுள்ள பூமிகூட. 

அப்படிப்பட்ட பூமியில் பிறந்துள்ள நாம் ஒருபோதும் மதவெறி கொண்டவர்களாய் இருக்கக் கூடாது. மதங்களுக்கு அப்பால் மனிதர்களை நேசிப்பவராய் இருக்க வேண்டும். மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதர்களாக வாழ முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். மதமா? மனிதனா? என்ற பிரச்சினை வரும்போது, முதலில் மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும். 

மனிதன் இல்லையேல் இந்த உலகில் எதுவும் இல்லை. உலகமே இல்லை. 

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் அர்ப்பணிக்கும் பண்பு. அப்பண்பை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். பிறருக்கு நன்மையைத் தருவதிலேயே நமது கவனம் முழுக்க இருக்க வேண்டும்.



உங்கள் வேலியில் படர்ந்திருக்கும் பாகல் கொடியைப் பாருங்களேன்.

நீங்கள் அதற்கு முறையாகப் பந்தல் அமைத்தாலும் சரி... அமைக்காவிட்டாலும் சரி! நீர் ஊற்றினாலும் சரி.. ஊற்றாவிட்டாலும் சரி! உரமிட்டாலும் சரி...உரமிடாவிட்டாலும் சரி! பாதுகாப்புக்காக வேலியிட்டாலும் சரி.. அல்லது அப்படியே விட்டு விட்டாலும் சரி! அந்த சின்னஞ்சிறு செடி தனது காய்க்கும தன்மையை விட்டுவிடுவதில்லை. நீருக்காகத தனது பிஞ்சு வேர்களை பூமிக்குள் கஷ்டப்பட்டு செலுத்துகிறது. குத்தும் வேலி முள்ளையே பந்தலாக்கி.. கொடி விட்டுப் படர்கிறது. 

சில நேரங்களில் ஆடு-மாடுகள் மேய்ந்து விட்டாலோ.. மிதித்துவிட்டாலோ.. அது சோர்ந்து போவதில்லை. மீண்டும்... மீண்டும் முளைவிட்டுக் காய்த்துக் குலுங்க வேண்டும் என்ற அதன் குணத்தை என்றும் மாற்றிக் கொள்வதில்லை. சோதனைகளையும், வேதனைகளையும் பொறுத்துக் கொண்டு, கடைசியில் பூவும், பிஞ்சுமாய்க் காய்த்துக் குலுங்குகிறது. நமக்கு சுவைமிக்க காய்கறியாகிறது.

"அர்ப்பணியுங்கள்!"- என்பதுதான் இந்த சின்ன பாகல் கொடி நமக்குச் சொல்லும் செய்தி. 

நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகம்கூட இதே செய்தியைத்தான் நமக்குத் தெரிவிக்கிறது. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி இயங்குவதால்தான் நாம் அமைதியுடன் வாழ முடிகிறது. பாகல் கொடி சொல்லும் செய்தியின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


ஏனென்றால் நாம் வாழும் நாடு நமது வீட்டைப் போன்றது. நமது வீட்டின் ஒவ்வொரு செங்கல்லையும் நாம் எப்படி கஷ்டப்பட்டு ஒன்று சேர்த்துக் கட்டியிருப்போம்! அப்படி கட்டிய வீட்டை நாம் உடைத்து விடுவோமா? ஒருக்காலும் செய்ய மாட்டோம். அதேபோல, நமது வீட்டாரிடம் நாம் வேற்றுமை காட்டுவோமா? ஒருபோதும் காட்ட மாட்டோம்! நமது அண்ணன்.. தங்கைக்கு ... சொந்த - பந்தங்களுக்கு தீமை வருவதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருப்போமா? அப்படி ஏதாவது நடந்துவிட்டால் துடிதுடித்து விடுவோம் அல்லவா?

அதேபோலத்தான்.. இந்த நாடும்... இந்த நாட்டு மக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள்கூட!

நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..! ஆம்.. மிகச் சிறந்த மனிதர்களாக!!

Related

அறிவமுது 5726249635632795859

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress