சாந்திவனத்து கதைகள்: 'மதிப்பென்பது என்ன?'


கரடியார் மும்முரமாக தையல் வேலையில் ஈடுபட்டிருந்தார்அதுவும் அழகிய வேலைபாடுகள் கொண்ட கை வேலை அது.

பக்கத்தில் குட்டி பாலு அப்பா தையல் வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருந்தது
அன்று ஞாயிற்றுக் கிழமைபள்ளி விடுமுறை.

ஓய்வு நேரங்களில் அப்பாவுக்கு உதவி செய்ய அது தையல் கடைக்கு வந்துவிடும்.

கரடியார் ஒரு துணியை எடுத்து அளந்து பார்த்தார். தேவையான இடங்களில் அடையாளம் செய்து கொண்டார்.

பல துண்டுகளாக வெட்டினார். பிறகு கத்திரிக்கோலை எடுத்து வைத்துவிட்டார்.

அதன்பிறகு ஒரு பெட்டிக்குள் பத்திரமாக வைத்திருந்த ஊசியை எடுத்தார். வெட்டிய பகுதிகளை எல்லாம் ஒன்று சேர்த்து தைக்க ஆரம்பித்தார். அந்த பணியிலேயே மும்மரமாக ஈடுபட்டுவிட்டார்.

கொஞ்சம் நேரம் சென்றதும். பிரமாதமாக தலைப்பாகை அமைந்துவிட்டது.

வேலை முடிந்ததும் கரடியார் திரும்பவும் ஊசியை எடுத்து பயபக்தியுடன் பெட்டிக்குள் வைத்து பூட்டிவிட்டார். கத்திரிக்கோலை கண்டு கொள்ளவே இல்லை.

குட்டி பாலுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“இவ்வளவு பெரிய துணியை பல துண்டுகளாக வெட்டிய கத்திரிக்கோலை வேலை முடிந்ததும் அலட்சியமாக அப்பா வைத்துவிட்டார். பெட்டிக்குள்ளிருந்து மிகச் சிறிய எந்தவிதமான விலை மதிப்பும் இல்லாத ஊசியை எடுக்கிறார்! தைக்கிறார். வேலை முடிந்ததும் மீண்டும் பயபக்தியுடன் ஊசியை பெட்டிக்குள் வைக்கிறார். இவ்வளவு பெரிய துணியை பல துண்டுகளாக வெட்டிய கத்திரிக்கோலை சட்டை செய்யாமல் இருக்கிறார்! என்ன இது?”

புரியாமல் கரடிக்குட்டி விழித்தது.


'ஜிகு.. ஜிகு' - என்று ஜொலிக்கும் அழகிய தலைப்பாகை தைத்து முடிக்கவும் அங்கு மயில் மாமா வரவும் சரியாக இருந்தது.

கரடியார் தலைப்பாகையை மயில் மாமாவிடம் கொடுத்தார். 

மயில் மாமா கொண்டையை ஒதுக்கிவிட்டு தலைப்பாகையை அணிந்து கொண்டு கண்ணாடியில் அழகு பார்த்தார்.

கொள்ளை அழகு தெரிய வெட்கத்தால் தலைகுனிந்தார்.

பிறகு அதற்கான கூலியை கொடுத்து விட்டு பாலுவிடம் வந்தார்.

"எப்படி செல்லம் இருக்கே?" - என்று விசாரித்தார்.

அன்பாக ஒரு முத்தம் கொடுத்தார்.

"நன்றி அண்ணா" -  என்று கரடியாரிடம் சொல்லிவிட்டு பறந்து சென்றார்.

பாலு குட்டி அப்பாவிடம் கேட்டது:

“அப்பா! கத்திரி எவ்வளவு விலை மதிப்பானது! மயில் மாமாவுக்கான துணியை நீங்கள் விரும்பிய விதத்தில் அதுதான் பல துண்டுகளாக வெட்டியது! அது இல்லாவிட்டால் நமது பிழைப்பே போச்சு! 

ஆனால், அந்த கத்திரிக்கோலை சட்டை செய்யாமல் ஓரமாக வைத்துவிட்டீர்கள். எந்தவிதமான விலைமதிப்பும் இல்லாத சின்னஞ்சிறிய ஊசியை பயபக்தியுடன் எடுத்து பாதுகாக்கிறீர்கள்! எனக்கு ஒன்றுமே புரியவில்லை!" - என்றது. 

"ஆம் மகனே! உண்மைதான்! கத்திரிக்கோலின் விலை அதிகம்தான்! துணியை பல துண்டுகளாக வெட்டியதும் அதுதான். 

ஆனால், மகனே! வெட்டப்பட்ட அத்தனை துண்டுகளையும் ஒன்றிணைத்து அழகிய தலைப்பாகையை உருவாக்கி துணிக்கு மதிப்பளித்தது ஊசி என்பதை மறந்துவிடாதே!"


"மகனே! இப்படி வா!" - என்று அருகில் அழைத்து மடியில் அமர்த்திக் கொண்ட கரடியார் சொல்ல ஆரம்பித்தார்:

"மகனே! ஒன்றின் மதிப்பென்பது, விலையை மட்டும் குறிப்பதல்ல. அது பயன்படும் விதத்தை குறிப்பது. ஒன்றின் விலையை வைத்தோ, அளவை வைத்தோ மதிப்பை தீர்மானிக்க முடியாது.

உலகளவில் இரண்டே இரண்டு பிரிவினர் உள்ளதையே நாம் பார்க்க முடியும். 

முதல் பிரிவினர், நம்மிடையே வேற்றுமையைத் தோற்றுவித்து அமைதியை கெடுப்பவர்கள். 

இரண்டாம் பிரிவினர், நம்மிடையே அமைதியையும், நல்லிணக்கத்தையும் விதைத்து ஒற்றுமையை வளர்ப்பவர்கள். 

முதல் பிரிவினரை நாமும் விரும்புவதில்லை.. இறைவனும் விரும்புவதில்லை. 

இரண்டாம் பிரிவினரை எல்லோரும் நேசிக்கிறார்கள். இறைவனும் நேசிக்கின்றான்.

பாலு குட்டிக்கு அப்பா சொன்னது ஒரளவு விளங்கியது. விளங்காததை அவன் வளர்ந்து நிச்சயம் கேள்வி கேட்டு புரிந்து கொள்வான்.


.

Related

சாந்திவனத்து கதைகள் 4027383093424617128

Post a Comment

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress