அறிவமுது: விபத்தில் பிறந்த சிரிப்பு
http://mazalaipiriyan.blogspot.com/2013/03/blog-post_12.html
சார்லி சாப்லின் நடிகரானதும், மேடையில் தோன்றி வயிறு குலுங்க சிரிக்க வைத்ததும் ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும்.
சார்லி சாப்லின் தாய் மேடைப் பாடகி. அப்போது சார்லிக்கு வயது ஐந்து. தாயுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளுக்குச் செல்வார்.
ஒருமுறை. மேடையில் பாடிக் கொண்டிருந்த அம்மாவின் குரல் திடீரென்று 'கம்மி' பாட முடியாமல் போனது. எவ்வளவோ முயன்றும் குரல் சரளமாய் வரவில்லை. ரசிகர்களின் கோபத்துக்குப் பயந்த சாப்லின் அம்மாவிடமிருந்து மைக்கை வாங்கி, விட்ட இடத்திலிருந்து பாட ஆரம்பித்தார்.
நிகழ்ச்சி தடைபடாமல் சிறுவன் பாடத் தொடங்கியதும் ரசிகர்கள் மகிழ்ச்சிப் பெருக்கால்.. நாணயங்களை வீசினார்கள். மழையாய்ப் பொழிந்த காசைக் கண்டதும் சாப்லின் பாட்டை சிறிது நேரம் நிறுத்தி பணிவாய் தலைதாழ்த்தி, "முதலில் நாணயங்களைப் பொறுக்கிக் கொண்டு பிறகு பாடுகின்றேன்!"- என்றார்.
சாப்லினின் அந்த சேட்டையையும் குரலையும் கண்ட ரசிகர்கள் வாய்விட்டு சிரித்தார்கள். பெரிதாய் ஆரவாரம் செய்தார்கள்.
அன்றிலிருந்து இன்றுவரை சார்லி சாப்லின் பெயரைக் கேட்டாலே சிரிக்கும் அளவுக்கு புகழ் பெற்றவரானார்.