அறிவமுது: இதயமே! இதயமே!
http://mazalaipiriyan.blogspot.com/2013/05/blog-post_7962.html
கருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்.
இருதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் 70 கன சென்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இப்படி ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்நாளில் ஏறக்குறைய இரண்டரைக் கோடி முறைகள் இது சுருங்கி விரிகிறது.
இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்க பாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை. எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும்.
இருதயத் துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாடியில் ஆறு பாகத்தில் ஒரு பாக நேரம் நின்று பின்பே துடிக்கிறது.
இதயத்திலிருந்து சுமார் 60 முதல் 70 காலன் வரை இரத்தம் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு வெளியேறிய இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவிட்டு 23 வினாடிகளில் மீண்டும் உள்ளே நுழைந்து விடுகிறது. ஒரு நாளில் சுமார் 3, 700 முறைகள் இரத்தம் இப்படி வருகின்றது.
மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிருந்து 1,00,000 மைல்கள் வரை பயணம் செய்கிறது.