அறிவமுது: 'வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்!'
http://mazalaipiriyan.blogspot.com/2013/06/blog-post.html
ஒரு மனிதன் சுவாசிப்பதற்கு எவ்வளவு பிராணவாயு
அதாவது ஆக்சிஜன் தேவை என்று தெரியுமா?
சராசரியாக ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நாளைக்கு 53 லிட்டர் ஆக்சிஜன் கண்டிப்பாக தேவைப்படுகிறது.
ஒருமரத்தில் உள்ள இலையானது 5 மி.லிட்டர் அளவிற்கு ஆக்சிஜனை வெளிவிடுகிறது. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் உறுப்பினர்கள்
என்றால்.. நீங்கள் சுவாசிக்க அதாவது உயிர் வாழ குறைந்தபட்சம் 50000 இலைகள் கொண்ட ஒரு
மரம் அவசியம்.
காற்றிலே ஆக்சிஜன் உண்டு
என்றாலும், கூடவே கரியமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன், நைட்ரஜன், சுவாசித்தலை
நிலைகுலையச் செய்கின்றன. கூடவே இரசாயன வாயுக்கள், கார்ப்பன்
மோனாக்சைடு போன்ற நச்சுப் பொருட்களை வெளிப்படுத்தும் வாகனங்களின் கரும்புகை என்று காற்று
கடுமையாக மாசுபட்டிருக்கிறது. இதனால் மனிதன் உயிர் வாழ குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒரு
மரம் வளர்ப்பது இன்றியமையாததாகும்.
குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது
கார்பன் டை ஆக்சைடு எடுத்துக்கொண்டு ஆக்சிஜனையும் வெளிப்படுத்துகிறது.
ஆக்சிஜனை அதிகமாக வெளியிடுவதில்
துளசியும், மூங்கிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில் துளசி பகலில்மட்டுமல்ல.. இரவிலும் கூட ஆக்சிஜனை வெளியிடுகிறது.
அதனால், வீட்டுத் தோட்டத்தில் இவைகளை அதிகமாக வளர்க்கலாம்.
ஆக்சிஜன் சிலிண்டர்களை ஆளாளுக்கு மாட்டிக்
கொண்டு சுற்றும் நாள் வரும்முன் மரங்களை வளர்த்து அதை இயற்கையாகப் பெறுவதே புத்திசாலித்தனம்.